வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக தமது வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம் என்று மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்.
மே மாதம் கடைசியில் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கவிருக்கும் இலங்கை அணி, அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இதில் இலங்கைக்கு எதிராக 15 ஆண்டுகளில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றை பெறும் நோக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு எப்படியான இலங்கை அணி வரும்?
இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம்…
மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் மூன்று போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்ற நிலையிலேயே இந்த ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர எதிர்பார்த்துள்ளது.
கடந்த ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே அணியுடனான வெளிநாட்டு மண்ணில் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றி இருந்தது. அத்துடன் 2017இல் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியது.
இந்நிலையில் அனைத்து வீரர்களும் மேலும் ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இலங்கை அணியுடனான எதிர்வரும் தொடரில் இவ்வாறான முடிவை பெற முடியும் என்று ஹோல்டர் நம்புகிறார்.
‘அண்மைக் காலத்தில் அவர்கள் (இலங்கை) நல்ல அணியான உள்ளனர். அவர்கள் மிக உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். நாம் எமது கிரிக்கெட் வாழ்வில் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். நாம் எமது இலக்கை அடைய முற்படவேண்டும் என்பதோடு நிலையான முன்னேற்றம் காண வேண்டும்‘ என்று ஹோல்டர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இவ்வருடம் ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்
முதலாவது ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் ஐக்கிய…
‘கடந்த ஆண்டு எங்களுக்கு ஒரு நியாயமான ஆண்டாக இருந்தது. நாங்கள் இங்கேயும் (மேற்கிந்திய தீவுகள்) மற்றும் அங்கேயும் சில போட்டிகளில் வென்றதோடு ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றோம். அந்த ஆண்டு வீரர்கள் வெற்றி உணர்வை பெற்றார்கள் என்ற வகையில் சிறப்பானதாக இருந்தது.
நாம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். கடந்த காலத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது எங்களுக்கு தடையாக இருந்தது. இந்த விடயம் குறித்து நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். போட்டிகளில் ஆடாத இந்த இரண்டு மாதங்களை நாம் நன்றாக பயன்படுத்த வேண்டும். இலங்கைக்கு எதிரான இந்த தொடருக்கு எமது வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்‘ என்றும் ஹோல்டர் கூறினார்.
கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை
ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக்..
இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் இதுவரை டெஸ்ட் தொடர் ஒன்றை வென்றதில்லை. கரீபியன் தீவுகளுக்கு இதுவரை மூன்று தடவைகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணியினரால் அந்த மண்ணில் ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெல்ல முடிந்துள்ளது.
எனினும், கடைசியாக 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி காலி மற்றும் கொழும்பில் நடந்த அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி கடைசியாக 2003ஆம் ஆண்டே இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒன்றை வென்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<