சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்காக வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவரான ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான
அந்தவகையில் இங்கிலாந்து அணியுடன் இந்த வாரம் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு பிரதியோடு மொத்தமாக 7 விக்கெட்டுக்களைச் சாய்த்த ஹோல்டர் 862 தரநிலைப் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருப்பதோடு, கடந்த 20 ஆண்டுகளில் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சிறந்த தரநிலைப்புள்ளிகளைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி வீரராகவும் சாதனை படைத்திருக்கின்றார்.
இதேநேரம், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் 904 தரநிலைப் புள்ளிகளுடன் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் நீடிக்கின்றார்.
அதேநேரம், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரே ஆசியப் பந்துவீச்சாளராக இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா (7ஆவது இடத்தில்) காணப்படுகின்றார்.
இன்னும். ஜேசன் ஹோல்டர் டெஸ்ட் சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் 485 தரநிலைப் புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்ந்தும் நீடிப்பதோடு, இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் 431 தரநிலைப் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்.
டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 911 தரநிலைப் புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி 2ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.
DRS முறைமைக்கு எதிராக மீண்டும் கருத்து வெளியிட்ட சச்சின்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நடைமுறைப்படுத்திவரும்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்பவீரரான ரோரி பேன்ஸ், டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் முதன்முறையாக முன்னேறியிருப்பதோடு, குறித்த டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் விளாசிய ஷேக் கிராவ்லி முதல் 100 இடங்களுக்குள்ளும் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியினைப் பொறுத்தவரை, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் 14ஆம் இடத்தில் இருப்பதே சிறந்த பதிவாக காணப்படுகின்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க