கார்லோஸ் ப்ராத்வைட்டின் துடுப்பாட்டத்தை பாராட்டிய ஜேசன் ஹோல்டர்

291
Image Courtesy - Getty Images

மன்செஸ்டர் நகரில் நேற்று (22) இடம்பெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் மேற்கிந்திய  தீவுகள் அணியை நியூசிலாந்து 5 ஓட்டங்களால் தோற்கடித்து த்ரில் வெற்றியினை பதிவு செய்தது.

கிரிக்கெட் ரசிகர்களை அவர்கள் இருக்கும் ஆசனங்களின் நுனிக்கே கொண்டுவரும் அளவுக்கு விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கார்லோஸ் ப்ராத்வைட் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ப்ராத்வைட் சதமடித்தும் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மே.தீவுகள்

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள்…

மொத்தமாக 82 பந்துகளை எதிர்கொண்ட கார்லோஸ் ப்ராத்வைட், 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் பெற்று ஒருநாள் போட்டிகளில் தனது கன்னி சதத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டி இடம்பெற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராத்வைட்டின் துடுப்பாட்டத்தினை பாராட்டியிருந்தார்.

“(கார்லோஸ் ப்ராத்வைட்டின் துடுப்பாட்டத்தினால்) முடிவில் நாம் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்தோம்.”

“போட்டியின் மத்திய ஓவர்களில் நாம் பின்னடைவை சந்தித்திருந்தோம். இந்நிலையில் கார்லோஸ் (ப்ராத்வைட்) துடுப்பாட வந்த பொழுது 20 இற்கு மேலான ஓவர்கள் எஞ்சியிருந்தன. இப்படியான ஒருவாய்ப்பு அவருக்கு சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்க காரணமாக அமைந்துவிட்டது” என ஜேசன் ஹோல்டர் குறிப்பிட்டார்.

எனினும் கார்லோஸ் ப்ராத்வைட் இன் சிறந்த துடுப்பாட்டத்தினால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனது அணி வெற்றி பெறாமல் போனது கவலை தருவதாக ஜேசன் ஹோல்டர் மேலும் குறிப்பிட்டார்.

“கவலை தரும் விடயமாக அமைவது, அவ்வளவு நெருங்கி வந்தும் போட்டியில் வெற்றிபெற முடியாதது ஆகும். எனினும், எனது வீரர்களை கண்டு பெருமை கொள்கின்றேன்.”

இதேநேரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தனர் என ஜேசன் ஹோல்டர் பாராட்டியிருந்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஒருகட்டத்தில் 167 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் அபாரமான பந்துவீச்சு காரணமாக 291 ஓட்டங்களையே பெற்றது.

நியூசிலாந்து அணியினை 291 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்துவது என்பது கடினமான விடயம். அந்தவகையில், எமது பந்துவீச்சாளர்கள்  சிறந்த முயற்சி ஒன்றினையே செய்திருந்தார்கள். போட்டி இடம்பெற்ற மைதானம் மிகவும் தட்டையாக இருந்தது. இதனால், அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியிருக்கவில்லை.

இந்தியாவை வீழ்த்தும் வாய்ப்பை கோட்டை விட்டோம்: குல்படின் வேதனை

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று…

இப்போட்டியின் மூலம் எங்களுக்கு நிறைய விடயங்களை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது. ஆனால், எங்களது வீரர்கள் விளையாடிய விதம் பெருமை அளிக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<