இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக விளையாடவுள்ள ஜப்பான்

481

அடுத்த ஆண்டு (2020 இல்) தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை ஜப்பான் இளையோர் கிரிக்கெட் அணி பெற்றிருக்கின்றது.

இதன் மூலம், ஐ.சி.சி. நடாத்தும் பாரிய கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஜப்பான் இளையோர் கிரிக்கெட் அணி முதல் தடவையாக விளையாட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா

இலங்கை A அணி போராடி பெற்ற வெற்றி இலக்கை இந்திய A அணி…

இளம் வீரர்களுக்குரிய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்குபெறும் கிழக்காசிய பசுபிக் பிராந்திய அணியினை தெரிவு செய்யும் குவாலிபையர் (Qualifier) தொடர் ஜப்பானில் இடம்பெற்றது.

இந்த தொடரில் எந்த தோல்விகளையும் பெற்றிராத பபுவா நியூ கினியா இளையோர் கிரிக்கெட் அணியும், ஜப்பான் இளையோர் கிரிக்கெட் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

எனினும், ஜப்பானின் சனோ நகரில் இடம்பெறவிருந்த தொடரின் இறுதிப் போட்டியில் பபுவா நியூ கினியா இளையோர் அணி தமது வீரர்கள் குழாத்தில் இருந்து 11 பேரினை இடைநீக்கம் செய்தது.

இந்த வீரர்கள் இடைநீக்கம் பபுவா நியூ கினியா இளையோர் அணி இறுதிப் போட்டியில் இருந்து வெளிநடப்புச் செய்ததற்கு சமன் என கருதப்பட்டு கிழக்காசிய பசுபிக் பிராந்திய குவாலிபையர் தொடரின் வெற்றியாளர்களாக ஜப்பான்  இளையோர் கிரிக்கெட் அணி தெரிவாகியது.

பாகிஸ்தான் மோதல் கைவிடப்பட முன்னேறியது இலங்கை

பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான்…

இந்த கிழக்காசிய பசுபிக் பிராந்திய குவாலிபையர் தொடரில் வெற்றியாளராக மாறியதன் மூலமே, ஜப்பான் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றது.

பபுவா நியூ கினியா கிரிக்கெட் சபை, கிழக்காசிய பசுபிக் பிராந்திய குவாலிபையர் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து வீரர்களை இடைநீக்கம் செய்தமைக்கு அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்களே காரணம் என தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும், இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

இந்த கிழக்காசிய பசுபிக் பிராந்திய குவாலிபையர் கிரிக்கெட் தொடரின் வெற்றியாளர்களாக நியூ கினியா இளையோர் கிரிக்கெட் அணியே மாறும் என பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வீரர்களின் நீக்கத்தோடு, அவ்வணியும் தொடரிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் காரணமாக பபுவா நியூ கினியா கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை எதிர் கொண்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக உலக சாதனை படைத்த மிச்செல் ஸ்டார்க்

நொட்டிங்கம் நகரில் நேற்று (6) இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது லீக்…

இதேநேரம் 1989 ஆம் ஆண்டு ஐ.சி.சி. உடன் இணைந்த பின்னர் 1996 ஆம் ஆண்டிலிருந்து அதன் அங்கத்துவ நாடுகளில் ஒன்றாக இருந்துவரும் ஜப்பான் இளையோர் அணிக்கு உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் விளையாட கிடைத்த இந்த சந்தர்ப்பம் அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட பாரிய அடைவுமட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<