ஒலிம்பிக்கில் பார்வையார்களுக்கு தடை

Tokyo Olympic - 2020

228

ஜப்பானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசினால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இன்றி மூடிய அரங்குகளுக்குள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, அந்த நகரில் 40 நாட்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக்கில் இலங்கை கொடியை ஏந்திச் செல்லவுள்ள சாமர நுவன், மில்கா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நிலையிலேயே டோக்கியோவில் அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. 

டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் டோக்கியோ நகரில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் பாதிப்பு 920 ஆக உயர்ந்தது. இதனால் வைரஸ் அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த அவசர நிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு மூடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்தல் போன்ற நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவார்கள். 

ஆனால், விதிகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video – குதிரைச் சவாரியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் Mathilda Karlsson..!| Tokyo Olympic 2020

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான போட்டிகள் அனைத்தும் மூடிய அரங்குகளுக்குள் நடத்தப்படும் என ஒலிம்பிக் அமைச்சர் தமாயோ மருக்காவா தெரிவித்தார்.

முன்னதாக, டோக்கியோ போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளிநாட்டு பார்வையாளர்களை தடை செய்தவற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். அதேபோல, ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கு 10,000 இரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், வைரஸ் அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. 

ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள முதலாவது திருநங்கை

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச், ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, சர்வதேச பாராலிம்பிக் குழு, ஜப்பான் மற்றும் டோக்கியோ பெருநகர நிர்வாகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.  

பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பதை ஒலிம்பிக் அமைச்சர் தமாயோ மருக்காவா உறுதி செய்துள்ளார்.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…