இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முக்கிய பதவி

36

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியானது இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரானது ஜூலை 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது 

இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலிரெண்டு டெஸ்ட்டில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், எஞ்சியிருக்கு போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ரோப் கீ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரோப் கீப், ‘லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ஜேம்ஸ் ஆண்டர்சன் எங்கள் அமைப்பில் தொடர்வார். மேலும் அவர் ஒரு வழிகாட்டியாக எங்களுக்கு உதவுவார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளர். அதனால் அவர் அணியிலிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை. மேலும் அணியின் ஆலோசகராக செயல்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் அதற்கு ஆர்வமாக இருந்தார். மேலும் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் நிறைய வாய்ப்புகள் உள்ளனர். ஒருவேளை அவர் இங்கிலாந்து அணியுடனேயே இருக்க விரும்பினால் அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரும் அதிஷ்டமாகும்என்று தெரிவித்துள்ளார் 

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் குவியலும் அடங்கும். அதுமட்டுமின்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹெரி ப்ரூக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், டான் லோரன்ஸ், டிலோன் பென்னிங்டன், ஒல்லி போப், மெத்யூ பொட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ். 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<