இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள ஆஷஷ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பதினொருர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஷ் தொடரின் மூன்று போட்டிகள் நடைபெற்றுமுடிந்த நிலையில், முதல் 2 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்ததுடன், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
>> லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்
இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றிருந்த போதும், நான்காவது போட்டிக்கான இறுதி பதினொவரில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
கடந்த மூன்று போட்டிகளிலும் வேகப்பந்துவீச்சாளராக செயற்பட்டுவந்த ஒல்லி ரொபின்சன் நான்காவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்தை மாத்திரமே இங்கிலாந்து அணி மேற்கொண்டுள்ளதுடன், மூன்றாவது போட்டியில் ஒரு ஐந்து விக்கெட் குவிப்புடன் ஆட்டநாயகன் விருதை வென்ற மார்க் வூட் தொடர்ச்சியாக அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார்.
துடுப்பாட்டத்தை பொருத்தவரை ஷெக் கிரவ்லே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹெரி புரூக், ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர்களாக மொயீன் அலி மற்றும் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளளனர். வேகப்பந்துவீச்சாளராக மார்க் வூட், கிரிஸ் வோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோருடன், ஸ்டுவர்ட் புரோட் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆஷஷ் தொடரின் நான்காவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை (19) ஓல்ட் டிரெபோர்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பதினொருவர்
ஷெக் கிரவ்லே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹெரி புரூக், ஜொனி பெயார்ஸ்டோவ், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவர்ட் புரோட்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<