எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டித் தொடரில் தொடரில் ஜமேகா தலாவஹஸ் அணிக்காக விளையாட இருந்த இலங்கை அணியின் லசித் மலிங்க முழங்கால் காயத்திலிருந்து குணமடைய 3 மாதங்கள் ஓய்வில் இருப்பதால் அவருக்குப் பதிலாக தென் ஆபிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை முதல் தடவையாக இத்தொடாரில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கட் வரலாற்றில் புதிய உலக சாதனை
3ஆவது கரீபியன் பிரீமியர் லீக் பருவத்திற்காக ஆறு தென் ஆபிரிக்க வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். ஜமேகா தலாவஹஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டெயின் இது தொடர்பாக கூறுகையில் “மொத்தமாக ஆறு அணிகளில் உலகில் தலைசிறந்த, முதன்மையான கிரிக்கட் வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். அத்தோடு நான் இந்தப் பருவகால கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஹசிம் அம்லா, எ பி டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர் மற்றும் மோர்ன் மோர்கெல் போன்ற எனது நெருங்கிய சக வீரர்களுக்கு எதிராக விளையாவுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்