தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் ஜமைக்கா அணியிடம் 105-25 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.
குழு Cயிற்கான இந்தப் போட்டியில் ஆரம்பத்திலிருந்து அபாரமாக ஆடிய ஜமைக்கா அணி 2வது தடவையாக தங்களுடைய 100 புள்ளிகள் என்ற மைல்கல்லை வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தில் பதிவுசெய்தது.
>>பொட்ஸ்வானா தொடரின் நம்பிக்கையுடன் உலகக்கிண்ணம் செல்லும் இலங்கை
அதுமாத்திரமின்றி 60 வருட உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட வரலாற்றில் 14வது தடவையாக 100 புள்ளிகள் என்ற மைல்கள் எட்டப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் கால்பகுதியில் 26-5 என்ற புள்ளிகள் கணக்கில் ஜமைக்கா அணி முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது காற்பகுதியில் முன்னிலையை 52-11 என முன்னிலையை அதிகரித்துக்கொண்டது.
இதேவேகத்தில் அடுத்த இரண்டு காற்பகுதிகளையும் 23-7 மற்றும் 30-7 என்ற புள்ளிகளை பெற்றுக்கொண்ட ஜமைக்கா அணி 105-25 என போட்டியை நிறைவுசெய்தது.
இலங்கை அணி சார்பில் இந்தப் போட்டியில் 22 முயற்சிகளில் திஷாலா 17 புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததுடன், தர்ஜினி சிவலிங்கம் ஒரு முயற்சியில் ஒரு புள்ளியை பெற்றுக்கொடுத்தார். இதேவேளை இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<