யாழ் மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தை முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்லும் வகையில், முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League) தொடரின் வீரர்கள் ஏலத்தில், ஆவரங்கால் இந்து இளைஞர் கழகத்தின் சச்சிதாநந்தம் கபிலக்ஷன் அதிகூடிய தொகைக்கு, ஆவரங்கால் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.
முதன்முறையாக ஏலத்தின் அடிப்படையில் வீரர்களை தெரிவுசெய்து, லீக் தொடரொன்றை நடத்துவதற்கு யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. புதிதாக கையாளப்பட்ட ஏலத்தின் அடிப்படையில், ஒவ்வொரு அணி உரிமையாளர்களுக்கும் 5000 புள்ளி வழங்கப்பட்டது.
மஞ்சி சுப்பர் லீக் இறுதிப்போட்டியில் இராணுவ, விமானப்படை அணிகள்
குறித்த இந்த 5000 புள்ளிகளிலிருந்து அணிகள் வீரர்களை தெரிவுசெய்ய முடியும். இதில், தாங்கள் ஏலத்துக்கு முன்னதாக தக்கவைத்த வீரருக்கு, 1000 புள்ளிகள் குறைக்கப்படும். மீதமுள்ள 4000 புள்ளிகளில் ஏனைய வீரர்களை அணிகள் வாங்கமுடியும்.
இதன்படி, ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏலத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் கழகத்தின் சச்சிதாநந்தம் கபிலக்ஷன், 1760 புள்ளிகளுக்கு, ஆவரங்கால் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தப்படியாக தொண்டமனாறு கலையரசி கழகத்தின் கிருஷ்ணகுமார் கீர்த்தனன் 1700 புள்ளிகளுக்கு சங்கானை செலஞ்சர்ஸ் அணிக்காகவும், புத்தூர் கலைமதி கழக வீரர் மகேந்திரம் வாகீசன், வல்வையூர் வொலி வொரியேர்ஸ் அணிக்காக 1500 புள்ளிகளுக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்
வீரர்கள் | அணிகள் | புள்ளிகள் |
சச்சிதாநந்தம் கபிலக்ஷன் | ஆவரங்கால் கிங்ஸ் | 1760 |
கிருஷ்ணகுமார் கீர்த்தனன் | சங்கானை செலஞ்சர்ஸ் | 1700 |
மகேந்திரம் வாகீசன் | வல்லையூர் வொலி வொரியர்ஸ் | 1500 |
கந்தசாமி வசீகரன் | மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் | 1220 |
ஜெயராசா திலக்ஷன் | ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் | 1120 |
சுதாகரன் சுதர்ஸன் | நீர்வை பசங்க | 1060 |
ஸ்ரீபரன் செந்தாலன் | ரைசிங் ஐலண்ட்ஸ் | 1000 |
புஷ்பராஷா சுஜீவன் | சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி | 1000 |
(அணிகளுக்கு கொடுக்கப்பட்ட 5000 புள்ளிகள், 50,000 ரூபா பெறுமதியாகும்)
அணிகள் ஏலத்துக்கு முன்னர் தக்கவைத்த வீரர்கள்
வீரர்கள் | அணிகள் |
பத்மதாஸ் நிதர்சன் | அரியாலை கில்லாடிகள் 100 |
சிவநேசன் புவிந்தன் | ரைசிங் ஐலண்ட்ஸ் |
பத்மசிவன் மலரவன் | மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் |
மாணிக்கன் மதுசன் | நீர்வை பசங்க |
ஸ்ரீபரன் அசோகன் | ஆவரங்கால் கிங்ஸ் |
சிவகுமார் சிந்துஜன் | சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி |
ஜெயரூபன் ஹரிதாஸ் | ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் |
செல்வராசா செல்வதரன் | வல்லையூர் வொலி வொரியர்ஸ் |
கந்தசாமி கவிசனன் | சங்கானை மக்களொன்றிய செலஞ்சர்ஸ் |
ஜப்னா வொலிபோல் லீக் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், தொடரில் 9 அணிகள் விளையாடவுள்ளன. அணிக்கு 12 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏலத்துக்கு முன்னர் ஒரு வீரரை அணிகள் தக்கவைத்துக்கொண்டன. குழாத்தில் 21 வயதுக்குட்பட்ட வீரர்கள் இருவர் இருக்க வேண்டும் என்பதுடன், அதில் ஒருவர் போட்டியின் முழுநேரமும் விளையாட வேண்டும். அணியில் கட்டாயமாக லிபரோ ஒருவர் இருக்க வேண்டும். அத்துடன், ஒரு கழகத்திலிருந்து அதிகபட்சமாக மூன்று வீரர்கள் மாத்திரமே, ஒரு அணிக் குழாத்தில் இடம்பெற முடியும்.
போட்டி வடிவத்தை பொருத்தவரை ஒவ்வொரு அணியும், எதிரணிகளுடன் தலா ஒவ்வொருமுறை மோதவுள்ளதுடன், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே-ஓஃப் சுற்றுக்கு (ஐ.பி.எல் வடிவம்) தகுதிபெற்று, இறுதிப்போட்டியை அடையமுடியும். தொடரில் மொத்தமாக 40 போட்டிகள் நடைபெறவுள்ளன.
தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் Bitu Link, CEB
இதேவேளை, முதன்முறையாக ஆரம்பமாகும் ஜப்னா வொலிபோல் லீக் தொடருக்கு ஜேர்மனியில் உள்ள அட்சயா இண்டர்நெசனல், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்டார் பூட் ஸ்டோர்ஸ் மற்றும் சந்தோஷ் ஜுவலெரி போன்றவை அணுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணிகள் | உரிமையாளர்கள் |
அரியாலை கில்லாடிகள் 100 | தவநாதன் ஹரிசாந்த், நித்தியானந்தன், கவிந்தன், கேதிஸ்வரன், நிஷாந்தன் |
ரைசிங் ஐலண்ட்ஸ் | K. சங்கரலிங்கம் |
மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் | செல்லையா பாலேந்திரம் |
நீர்வை பசங்க | துறைராஜா பிரதீபன் |
ஆவரங்கால் கிங்ஸ் பைட்டர் | தம்பிராசா வினோஜன் |
சென்ட்ரல் ஸ்பைகர்ஸ் அச்சுவேலி | கமலநாதன் மகிந்தரன் |
வல்வையூர் வொலி வொரியர்ஸ் | ஜெகபிரதான் |
ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் | செல்வராஜா ரமணன் |
சங்கானை மக்களொன்றிய சேலஞ்சர்ஸ் | P. விஜயகுமார் |
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<