முதலாவது ஜப்னா சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிக் குழு நிலை போட்டிகள் கடந்த வாரத்துடன் நிறைவிற்கு வந்திருக்கின்றன. அதனடிப்படையில் தோல்விகளேதுமின்றி முறையே குழு A மற்றும் Bஇல் முன்னிலை வகிக்கும் ஜப்னா பந்தேர்ஸ் மற்றும் வேலணை வேங்கைகள் முதலாவது தகுதிப் போட்டியிலும், குழு நிலை போட்டிகளில் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்திலிருக்கும் அரியாலை வொரியர்ஸ் மற்றும் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணிகள் விலகல் போட்டியிலும் சனிக்கிழமை (01) மோதவுள்ளன. அதேவேளை, மறுநாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டாவது தகுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளது.
அரியாலை வொரியர்ஸ் எதிர் நல்லூர் புறோங்கோஸ்
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் என்ற நிலையில், நல்லூர் புறோங்கோஸ் மற்றும் அரியாலை வொரியர்ஸ் அணிகள் தமது இறுதி குழு நிலைப் போட்டியில் மோதியிருந்தன.
பிளே ஓப் வாய்ப்பை தவறவிட்ட நல்லூர்; பந்தேர்ஸிற்காக அரைச்சதம் கடந்த சந்தோஷ்
முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் தொடரின்…
முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்கு பணிக்கப்பட்ட நல்லூர் புறோங்கோஸ் அணி தமது தலைவர் ஜேம்ஸினது விக்கெட்டினை 18 ஓட்டங்களிற்கு பறிகொடுத்தது. மூன்றாவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த மத்திய கல்லூரியின் முன்னாள் அணித்தலைவர் பிரியலக்ஷன் ஒரு முனையில் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரிக்க மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது நல்லூர் புறோங்கோஸ்.
இளம் துடுப்பாட்டக்காரர் பிரியலக்ஷன் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் ஜெரிக் துஷாந் மற்றும் லோகதீஷ்வரிற்கு தலா 02 விக்கெட்டுகள் கிடைத்திருந்தன.
பதிலிற்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த அரியாலை வொரியர்ஸின் முதலிரு விக்கெட்டுகளையும், முதலாவது ஓவரிலேயே வீழ்த்தினார் பிரபவன். மத்திய வரிசையில் ஜெரிக் துஷாந், கோபிராம் மற்றும் பிரியலக்ஷன் ஆகியோரது 20களின் துணையுடன் போட்டியை நகர்த்திக்கொண்டிருந்தனர் அரியாலை வீரர்கள்.
16ஆவது ஓர் நிறைவில் அரியாலை வொரியர்ஸிற்கு வெறுமனே 3 விக்கெட்டுகள் கைவசமிருக்கையில் 46 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் புறோங்கோஸிற்கு சாதகமாக போட்டி நகர்ந்தது.
அடுத்த ஓவரில் 10 ஓட்டங்களை மட்டும் நோபேர்ட் விட்டுக்கொடுக்க, ஜெம்ஸ் ஜான்சன் வீசிய 17ஆவது ஓவரில் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இறுதி பந்தில் ஆட்டமிழந்தார் மதுசன்.
Photos: Ariyalai Warriors vs Nallur Broncos | Jaffna Super League 2018
ThePapare.com | Murugaiah Saravanan | 27/01/2019 Editing and re-using images without permission of ThePapare.com…
பிரபவன் வீசிய இறுதிக்கு முந்தைய ஓவரில் இரண்டு ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த லினோர்த்தன் தம் பக்கம் போட்டியினை மாற்றினார்.
சுஜனது இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் வெற்றியிலக்கினை அடைந்த அரியாலை வொரியர்ஸ் ப்ளே ஓவ் சுற்றிற்கு தகுதிபெற்றது.
- ஆட்டநாயகன் – ஜெரிக் துஷாந் (அரியாலை வொரியர்ஸ்)
போட்டியின் சுருக்கம்
நல்லூர் புறோங்கோஸ் 156/7 (20) பிரியலக்ஷன் 74, சிம்சன் 23, லோகதீஸ்வர் 2/17, ஜெரிக் துஷாந் 2/32
அரியாலை வொரியர்ஸ் 157/8 (19.3) ஜெரிக் துஷாந் 33, செல்டன் 28*, மதுசன் 23, ஜெம்ஸ் ஜான்சன் 4/33, பிரபவன் 2/35
போட்டி முடிவு – 02 விக்கெட்டுகளால் அரியாலை வொரியர்ஸ் அணி வெற்றி
ஜப்னா பந்தேர்ஸ் எதிர் பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸ்
ஜப்னா பந்தேர்ஸ் அணி ஏற்கனவே ப்ளே ஓப்விற்கு தகுதிபெற்ற நிலையிலும், பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸ் தொடரிலிருந்து வெளியேறிய நிலையிலும் இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இடம்பெற்றிருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைக்கப்பட்ட சுப்பர் கிங்ஸ் அணியினர் சாம்பவன் மற்றும் கதியோனினது சுழற்பந்திற்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும், சஜீகன்(34), சாகித்தியன் (28) ஆகியோரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
Photos: Point pedro Super Kings vs Jaffna Panthers | Jaffna Super League 2018
ThePapare.com | Murugaiah Saravanan | 27/01/2019 Editing and re-using images without permission of ThePapare.com…
பந்தேர்ஸ்ஸிற்காக கதியோன் 3 விக்கெட்டுகளையும், சாம்பவன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா பந்தேர்ஸ் அணி யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரரான சந்தோஷினது 87 ஓட்டங்கள் மற்றும் தொடர் முழுவதுமாக சோபித்து வரும் மோகன்ராஜ்ஜினது 47 ஓட்டங்களுடன் 16ஆவது ஓவரில் வெற்றியிலக்கினை அடைந்தது.
பந்துவீச்சில் உமைசுதனிற்கு 2 விக்கெட்டுகள் கிடைத்திருந்தது.
தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியுடன் வேலணை வேங்கைகளிற்கெதிரான முதலாவது தகுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது ஜப்னா பந்தேர்ஸ் அணி.
- ஆட்டநாயகன் – சந்தோஷ் (ஜப்னா பந்தேர்ஸ்)
போட்டிச்சுருக்கம்
பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸ் 153 (20) சஜீகன் 34, சாகித்தியன் 28, கதியோன் 3/34, சாம்பவன் 2/20
ஜப்னா பந்தேர்ஸ் 155/4 15.2 சந்தோஷ் 87* மோகன்ராஜ் 47, உமைசுதன் 2/21
போட்டி முடிவு – 06 விக்கெட்டுகளால் ஜெப்னா பந்தேர்ஸ் வெற்றி