பிளே ஓப் சுற்றில் ஜெப்னா பந்தேர்ஸ், அதிரடியில் வென்ற நல்லூர் புறோங்கோஸ்

Jaffna Super League 2018 - T20 Cricket Tournament

264

யாழ் மாவட்டத்தில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் இடம்பெற்று வரும் ஜப்னா சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றினுடைய இறுதிக் கட்டப் போட்டிகள் அண்மையில் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.

வேலணை வேங்கைகள் எதிர் பண்ணை ரில்கோ கிறேடியேற்றர்ஸ்

குழு B இலிருந்து ஏற்கனவே பிளே ஓபிற்கு தகுதிபெற்றிருக்கும் வேலணை வேங்கைகள், குழுவில் முதலிடத்தினை உறுதி செய்யவும், ரில்கோ கிறேடியேற்றர்ஸ் ஆறுதல் வெற்றிக்காகவும் குழுவின் இறுதிப் போட்டியில் களங்கண்டிருந்தன.

Photos: Point pedro Super Kings vs Jaffna Panthers | Jaffna Super League 2018

ThePapare.com | Murugaiah Saravanan | 27/01/2019 Editing…..

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பண்ணை ரில்கோ கிறேடியேற்றர்ஸ் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. அதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய வேங்கைகள் அணியினர், சத்தியன் தொடரில் இரண்டாவது அரைச்சதத்தினை பெற்றுக்கொள்ள 184 என்ற வெற்றியிலக்கினை எதிரணிக்கு நிர்ணயித்தனர். ஓட்ட எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு, முன் வரிசையில் ஞானந்தசர்மா 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.  

பந்துவீச்சில் பண்ணை ரில்கோ கிறேடியேற்றர்ஸ் அணிக்காக  புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் வீரர் ரதீசன் 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர் தமது துடுப்பாட்ட இன்னிங்ஸை ஆடிய பண்ணை ரில்கோ அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அனஸ்ராஜ் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததிருந்தவேளை முதலாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்டார். தொடர்ந்துவந்த வீரர்களினது விக்கெட்டுகளும் விரைவாக வீழ்த்தப்பட 14.5 ஓவர்களில்  சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த அவ்வணியினர் 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நந்தகுமார் 4 விக்கெட்டுகளையும், உத்தமகுமரன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

போட்டியில் 102 ஓட்டங்களால் வெற்றிபெற்ற வேலணை வேங்கைகள் அணி தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியினை பதிவு செய்தது. மறுபக்கம்  பண்ணை ரில்கோ கிறேடியேற்றர்ஸ் அணியினர் வெற்றியேதுமின்றி தொடரினை நிறைவு செய்தனர்.

ஆட்டநாயகன் – நந்தகுமார் (வேலணை வேங்கைகள்)

போட்டிச்சுருக்கம்

வேலணை வேங்கைகள் 183 (20) சத்தியன் 55, ஞானகாந்தசர்மா 34, ரதீசன் 3/30, மதுசன் 2/23

பண்ணை ரில்கோ கிறேடியேற்றர்ஸ் 81 (14.5) அனஸ்ராஜ் 27, நந்தகுமார் 4/14, உத்தமகுமரன் 3/18

போட்டி முடிவு – 102 ஓட்டங்களால் வேலணை வேங்கைகள் வெற்றி

Photos : Velanai Vengaikal vs Pannai Tilko Gradiators | Jaffna Super League 2018/19

ThePapare.com | Jeyendra Logendran | 21/01/2019 Editing and….


ஜப்னா பந்தேர்ஸ் எதிர் அரியாலை வொரியர்ஸ்

குழு A இல் நிரலிடப்பட்டுள்ள ஜப்னா பந்தேர்ஸ் மற்றும் அரியாலை வொரியர்ஸ் ஆகிய இரு தரப்பும் தமது முதலாவது போட்டிகளில் வெற்றியினை பதிவுசெய்த நிலையில் இரண்டாவது வெற்றிக்காக போட்டியிட்டிருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட அரியாலை வொரியர்ஸ் அணி, முன்வரிசையில் முன்னாள் சென். ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் துவாரகசீலனின் அரைச்சதத்தின் உதவியுடன் 200இற்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

அணி 128 ஓட்டங்களை பெற்றிருக்கையில் நான்காவது விக்கெட்டாக 63 ஓட்டங்களுடன் துவாரகசீலன் ரன் அவுட் முறை மூலம் ஆடுகளம் விட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்துவந்த துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தப்பட சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அரியாலை தரப்பினர் எதிரணிக்கு 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தனர்.

வேகப்பந்து வீச்சாளர்களான மோகன்ராஜ் 3 விக்கெட்டுகளையும், சுரேந்திரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

Photos: Ariyalai Warriors vs Nallur Broncos | Jaffna Super League 2018

ThePapare.com | Murugaiah Saravanan | 27/01/2019 Editing and…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா பந்தேர்ஸ், முன்வரிசையில் மோகன்ராஜின் 37 ஓட்டங்கள் மற்றும் சந்தோஸ், கல்கோகன் ஆகியோரது 18, 19 ஓட்டங்களினது உதவியுடன் வெறுமனே 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியொன்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

எனினும், 15ஆவது ஓவரினை வீசுவதற்கு அழைக்கப்பட்ட மது இரண்டு ஓவர்களில், அணித்தலைவர்  அருண்குமாரினது (34) விக்கெட் உள்ளடங்கலாக வெறுமனே 3 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இறுதி ஓவரில் 8 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலைக்கு போட்டி நகர்ந்தது. துவாரகசீலன் வீசிய முதற் பந்தில் ஒரு ஓட்டம் கிடைக்கப்பெற, டர்வின் அடுத்த பந்தினை ஆறு ஓட்டமாக மாற்றினார். தொடர்ந்தும் போராடிய துவாரகசீலன் 3 ஓட்டமற்ற பந்துகளை வீசினார். இறுதிப்பந்தில் நான்கு ஓட்டமொன்றினை டர்வின் பெற போட்டியில் திரில் வெற்றி பெற்ற பந்தேர்ஸ் அணி ப்ளே ஓப் வாய்ப்பினை உறுதி செய்தது.  

மது வெறுமனே 6 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இது தொடரில் இதுவரை பெறப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சு பெறுதியாக பதியப்பட்டுள்ளது.  

ஆட்டநாயகன் – மோகன்ராஜ் (ஜெப்னா பந்தேர்ஸ்)

போட்டிச்சுருக்கம்

அரியாலை வொரியர்ஸ் 163 (20) துவாரகசீலன் 63, எரிக் துஷாந் 21, மோகன்ராஜ் 3/43, சுரேந்திரன் 2/18

ஜப்னா பந்தேர்ஸ் 167/6 (20) மோகன்ராஜ் 37, அருண்குமார் 34, மதுசன் 4/06

போட்டி முடிவு – 4 விக்கெட்டுகளால் ஜப்னா பந்தேர்ஸ் வெற்றி

Photos : Jaffna Panthers VS Nallur Broncos | Jaffna Super League 2018

ThePapare.com | Murugaiah Saravanan | 21/01/2019 Editing and….


பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸ் எதிர் நல்லூர் புறோங்கோஸ்

நல்லூர் புறொங்கோஸ் மற்றும் பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ப்ளே ஓப் வாய்ப்பினை தக்க வைப்பதற்கு இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியிருந்தன.  

முன்வரிசையில் சாகித்தியன் 27 ஓட்டங்களையும், மத்திய வரிசையில் நிறோசன் மற்றும் நிகர்ஜன் முறையே 49 மற்றும் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பலமான ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த சுப்பர் கிங்ஸ் வீரர்களது விக்கெட்டுகள் இன்னிங்ஸின் பிற்பகுதியில் விரைவாக சாய்க்கப்பட 3 பந்துகள் மீதமிருக்கையில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அவ்வணியினர் 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பிரபவன் மற்றும் சுஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நல்லூர் புறொங்கோஸ்  வீரர்களது விக்கெட்டுகளை விரைவாக சாய்த்தனர் பொயின்ட் பெட்றோ வீரர்கள். 74 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நல்லூர் புறொங்கோஸினை வெற்றியை நோக்கி நகர்த்தினார் 8ஆம் இலக்கத்தில் களத்திற்கு வந்த நோபேர்ட்.  

Photos: Point pedro Super Kings vs Nallur Broncos | Jaffna Super League 2018

ThePapare.com | Ushnatha Senthilselvan | 22/01/2019 Editing….

நோபேர்ட் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, பிரபவன் தன் பங்கிற்கு ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களை பெற 19 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கினை அடைந்தது நல்லூர் புறொங்கோஸ்.

பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸிற்காக சேந்திரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.  

ஆட்டநாயகன் – பிரபவன் (நல்லூர் புறொங்கோஸ்)

போட்டிச்சுருக்கம்

பொயின்ட் பெட்றோ சுப்பர் கிங்ஸ்ஸ 170 (19.3) நிறோஜன் 49, சஜீகன் 33, சாகித்தியன் 27, சுஜன் 3/21, பிரபவன் 3/39

நல்லூர் புறொங்கோஸ் 171/8 (19) நொபேர்ட் 42, பிரபவன் 36′ பிரியலக்சன் 22, சேந்திரன் 3/30, லதுசன் 2/26

போட்டி முடிவு – 2 விக்கெட்டுகளால் நல்லூர் புறொங்கோஸ் வெற்றி

தொடரின் விலகல் போட்டியும், முதலாவது தெரிவுப் போட்டியும் எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பறவுள்ளதுடன், இரண்டாவது தெரிவுப் போட்டி 3ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வேலணை வேங்கைகள் மற்றும் கொக்குவில் ஸ்டார்ஸ் பிளே ஓப் சுற்றில்

முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் T20 தொடரின் மூன்றாவது நாள்….

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<