இயற்கையை முன்நிறுத்தி புதிய ஜேர்ஸியில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்

431
Jaffna stallions embraces eco

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள பிரபல அணிகளில் ஒன்றாக வலம்வந்து கொண்டிருக்கின்ற திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஒக்ஸிஜன் ப்ளூ’ (Oxygen Blue) என்ற புதிய வகை ஜேர்ஸியை அணிந்து விளையாடியது. 

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கெதிராக நேற்று (03) நடைபெற்ற போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் இவ்வாறு ஒட்சிசன் நீல நிறத்திலானன ஜேர்ஸியை அணிந்து விளையாடியிருந்தார்கள்.  

>> ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றி

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று (03) நடைபெற்ற மிகவும் பரபரப்பான லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.  

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றி அலை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது

இந்த நிலையில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் நேற்றைய போட்டியில் அணிந்து விளையாடிய ஜேர்ஸி குறித்து அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

”இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் விவசாயம் செய்கின்ற ஒரு பகுதியாகும். அதிலும் குறிப்பாக, வருடமொன்றுக்கு குறைவான மழைவீழ்ச்சி தான் அங்கு கிடைக்கும்.

இதன்படி, கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலை நோக்கிய எங்கள் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் நீல நிறத்திலான ஜேர்சியை அணிந்து விளையாடவுள்ளனர்.

>> Video – LPL இல் ‘கில்லி’ ஆன JAFFNA STALLIONS..!

குறிப்பாக, இயற்கை மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகின்ற வகையில் எமது அணி வீரர்கள் ‘ஒக்ஸிஜன் ப்ளூஎன்ற ஜேர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர்

அதேபோல, இலங்கையும் கடலால் சூழப்பட்ட தீவாகவும், விவசாயத்தை நம்பியுள்ள நாடு என்பதையும் வெளிக்காட்டவே இவ்வாறு நாங்கள் புதிய ஜேர்ஸியுடன் விளையாடுகின்றோம்.

அத்துடன், புரெவி சூறாவளியினால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே, அனைவரும் மிக விரைவில் மீண்டு வரவேண்டும்” என பிரார்த்திப்பதாகவும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<