இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமக்காகப் பெற்றனர்.
ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணம் புனித பத்திரிசியார் கல்லூரி வசம்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிரான 28 ஆவது…..
இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்கள் குவித்தது.
புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில், அரைச்சதம் விளாசிய ஐவன் ரொஷந்தான் 47 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 67 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுமுனையில், யாழ்ப்பாண கல்லூரியின் பந்துவீச்சு சார்பில் நர்த்தனன் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 180 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாண கல்லூரி அணியினர் 20 ஓவர்கள் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தனர்.
Photos: St. Patrick’s College vs Jaffna College – 1st T20 cricket Encounter 2020
யாழ்ப்பாண கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் கெளசிகன் அரைச்சதம் தாண்டி 56 ஓட்டங்கள் பெற்ற போதும் அது வீணானது.
இதேநேரம், புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் வெற்றியினை டனிசியஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி உறுதி செய்திருந்தார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன், யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி அணி யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிராக ஒருநாள், டி20 என இரு வகையான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றியாளர்களாக மாறிக் கொள்கின்றது.
இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு
சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு…..
போட்டியின் சுருக்கம்
புனித பத்திரிசியார் கல்லூரி – 179/8 (20) – ஐவன் ரொஷாந்தன் 67, நர்த்தனன் 3/08
யாழ்ப்பாண கல்லூரி – 133/7 (20) – கெளசிகன் 56, டனிசியஸ் 23/2
முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 46 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<