யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் மாகாண ரீதியில் நடாத்திய பாடசாலை அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி யாழ். மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளது. தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

இத்தொடரின் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் நேற்று யாழ். துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றன.  

இறுதிப் போட்டி

முன்னணி வீரர்களான யூட்சுமன் மற்றும் அனோஜன் ஆகியோர் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த ஹென்ரியரசர் கல்லூரி அணி, தீர்மானம் மிக்க இறுதிப் போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் இலகுவான கோல் வாய்ப்பைத் தவறவிட்டது.

அதன் பின்னர் 6ஆவது நிமிடத்தில் பந்து கையில் பட்ட தவறினால் கிடைத்த தண்ட உதையை சாதகமாகப் பயன்படுத்திய ஸ்ரலோன், ஹென்ரியரசர் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மத்திய கல்லூரிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் புகைப்படங்கள்: யாழ் மத்திய கல்லூரி – புனித ஹென்ரியரசர் கல்லூரி

அதைத் தொடர்ந்து ஆட்டத்தை வேகப்படுத்தி, மத்தியின் கோல் பரப்பை ஆக்கிரமிக்க முயற்சித்த ஹென்ரியரசர் கல்லூரியின் முன்கள வீரர்கள் தொடர்ச்சியாக தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை வீணடித்தனர். அதேவேளை, அவர்கள் தமது கோல் பரப்பை ஆக்கிரமிக்க முடியாத வண்ணம் மத்தியின் பின்களமும் பலமாய் இருந்தது.

சொந்த மண்ணில் பாடும்மீனை விழ்த்திய கொழும்பு ரட்னம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில்.

ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்திலேயே மத்திக்கு பதிலடி கொடுக்கும் முகமாக மிகவும் லாவகமாக தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார் மதுஸ்டன்.

முறையற்ற விதத்தில் ஆடிய மத்திய கல்லூரி அணியின் ரேம்ஸனிற்கு 23ஆவது நிமிடத்திலும், 26ஆவது நிமிடத்தில் ஹென்ரியரசர் அணியின் அஜித்திற்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டம் மிகவும் சூடுபிடித்திருந்த நிலையில் 27ஆவது நிமிடத்தில் மத்தியின் இரண்டாவது கோலினைப் பெற்றுக் கொடுத்தார் ரேம்ஸன்.

தொடர்ந்தும் விறுவிறுப்பிற்குக் குறைவில்லாது இடம்பெற்ற முதலாவது பாதியில் இரு அணிகளும் மாறிமாறி எதிரணியின் கோல்பரப்பை ஆக்கிரமித்த போதும் இரு அணியினதும் பின்களம் மிகவும் பலமாய் இருந்தது.

ஹென்ரியரசர் கல்லூரியின் றூபன்ராஜ் மிக இலகுவாக கோல் பெற முற்பட்ட வேளை, அதனை மிகவும் லாவகமாகத் தடுத்தார் மத்திய கல்லூரி அணியின் கோல் காப்பாளர் பெனோஜன்.

தொடர்ந்தும் தனக்குக் கிடைத்த இலகுவான ஹெடர் உட்பட பல வாய்ப்புக்களைத் தவறவிட்டுக்கொண்டிருந்தார் ஹென்ரியரசர் அணியின் முன்னணி வீரர் அன்டனிராஜ்.

போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் ஹென்ரியரசரின் கனிஸ்ரனிற்கும் (41ஆவது நிமிடம்), மத்தியின் பெலினிற்கும் (45ஆவது நிமிடம்) மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

யாழ் மத்திய கல்லூரி அணியின் முன்னிலையுடன் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: யாழ் மத்திய கல்லூரி 02 – 01 புனித ஹென்ரியரசர் கல்லூரி

இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதலே ஹென்ரியரசர் வீரர்கள் பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் தமக்கான கோல் பெறும் வாய்ப்புக்களை தொடர்ச்சியாகத் தவறவிட்டார் மதுஸ்டன்.

ஆட்டத்தின் 65ஆது நிமிடத்தில் மத்தியின் றெக்ணோவிற்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் மதுஸ்டன் அதிரடியாய் கோல் ஒன்றைப் பெறுவதற்கு முயற்சித்த போதும் மத்தி வீரர் பெனோஜன் அதனை இலகுவாகத் தடுத்தார்.

Jaffna Schools Footballஇறுதியாக இடம்பெற்று முடிந்த பாடசாலை அணிகளுக்கு இடையிலான கொத்மலே கிண்ணத் தொடரில் கொழும்பு அணிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த ஹென்ரியரசர் அணி, இப்போட்டியில் தமது வாய்ப்புக்களை வீணடித்துக்கொண்டிருந்த வேளையில், தமக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார் மத்தியின் பெலின். ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் கோல் காப்பாளர் தடுத்துத் திரும்பிய பந்தை எதிர்பாராத விதமாக அவர் கோலாக்கினார்.

ஆட்டத்தின் 84ஆம், 85ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து மத்தியின் ரெம்சன் மற்றும் டொரிங்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டன.

முதல் நிமிடம் முதல் இறுதி நிமிடம் வரை விறுவிறுப்பிற்குக் குறைவில்லாது இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் வீரர்களுக்கு பெருந்தொகையான மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டமையானது அவர்களின் விதிமுறைகளுக்கு மாற்றமான விளையாட்டினையே காண்பித்தது.

போட்டியின் நிறைவில் பலம் மிக்க ஹென்ரியரசர் கல்லூரி அணியை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வீழ்த்திய யாழ் மத்திய கல்லூரி அணி இத்தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.   

முழு நேரம்: யாழ் மத்திய கல்லூரி 03 – 01 புனித ஹென்ரியரசர் கல்லூரி

கோல் பெற்றோர்
யாழ். மத்திய கல்லூரி – ஸ்ரலோன் 6’, ரேம்ஸன் 27’, பெலின் 84’
புனித ஹென்றீசியர் கல்லூரி – மதுஸ்டன் 16’

விருதுகள் 

சிறந்த சூட்டர் – ரேம்ஸன் (J.C.C)
சிறந்த தடுப்பாளர் – றூபன்ராஜ் (S.H.C)
சிறந்த கோல்காப்பாளர் – பெனோஜன் (J.C.C)


மூன்றாம் இடத்திற்கான போட்டி

மூன்றாமிடத்திற்கான போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியை எதிர்த்து யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதலே தமது முழு ஆதிக்கத்துடன் ஆடிய பத்திரிசியார் கல்லூரிக்கு 8ஆவது நிமிடத்தில் கிடைத்த தண்ட உதையை சாதமாகப் பயன்படுத்திய சுபாஸ், அதனை கோலாக மாற்றினார்.

போட்டியின் புகைப்படங்கள்: புனித பத்திரிசியார் கல்லூரி – மகாஜனா கல்லூரி

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவ்வணியினர் சிறந்த வாய்ப்புக்களைப் பெற்றதுடன் அவற்றை சிறப்பாகவே நிறைவு செய்தனர்.

டி மெசனொட், ஹமீத் அல் ஹுசைனி, ஸாஹிரா மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா அணிகள் அரையிறுதிக்கு தெரிவு

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80ஆம் வருட குழுவினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டு வரும் 2017ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கிண்ண தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு.

ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் சாந்தன் ஹெடர் மூலம் இரண்டாவது கோலைப் பெற்றார். அடுத்த கோலையும் அதே வேகத்தில் அவர் 29ஆவது நிமிடத்தில் பதிவு செய்தார். தொடர்ந்து 32ஆவது மற்றும் 56ஆவது நிமிடங்களில் பத்திரிசியாரின் கொய்ன்ல் இரண்டு கோல்களை தனது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

எதிரணியினர் 5 கோல்களைப் பெற்றிருந்த வேளையிலேயே மகாஜனாக் கல்லூரி அணியின் முதல் கோல் பெறப்பட்டது. அவ்வணி சார்பாக 60ஆவது நிமிடத்தில் மதன்ராஜ் கோல் பெற்றுக்கொடுத்தார்.

எனினும் அதற்கு அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே (65ஆவது நிமிடம்) மகாஜனாக் அணியின் கோலுக்கு பதிலடி கொடுத்தார் கெய்ங்ஸ். மீண்டும் சாந்தன் 75வது நிமிடத்தில் அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

ஆட்டத்தின் இறுதித் தருவாயில், அதாவது 85ஆம் 86ஆம் நிமிடங்களில் பிறயன் மற்றும் டார்வின் ஆகியோர் கோல் பெற்றுக் கொடுக்க போட்டியின் நிறைவில் மகாஜனாக் கல்லூரியை இலகுவாக வென்றது புனித பத்திரிசியார் கல்லூரி அணி.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 09 – 01 மகாஜனா கல்லூரி

கோல் பெற்றோர்
புனித பத்திரிசியார் கல்லூரி – சுபாஸ் 8’, சாந்தன் 20’,29’,75’, கெய்ங்ஸ் 32’,56’,65’, டார்வின் 85’, பிறயன் 86’
மகாஜனாக் கல்லூரி – மதன்றாஜ் 60’

பெண்களுக்கான கண்காட்சிப் போட்டி

இப்போட்டியில் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியை எதிர்த்துப் போட்டியிட்ட தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டினர். மகாஜனாக் கல்லூரிக்கு சனா கோல் பெற்றுக் கொடுத்தார்.

  மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு