சம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி  

317
Jaffna - Mullaiteevu Milo Cup U14 Final

ஐந்தாவது முறையாக இடம்பெறும் மைலோ கிண்ண போட்டியில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது.  

இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும், மூன்றாமிடத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றன.  

இறுதிப் போட்டி

பல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்த உத்வேகம் மிகு அணியான மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியினர், கிண்ணத்துக்கான சொந்ததக்காரராகும் இறுதி ஆட்டத்தில் பலம் மிக்க புனித பத்திரிசியார் கல்லூரி அணியுடன்  மோதியது.

9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர்

ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ கிண்ண கால்பந்து தொடரின் ஓர்…

போட்டியின் 3ஆவது நிமிடத்தில் முதல் கோலினைப் போட்டார் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஜெரோம். தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களில் அடுத்த கோலினையும் போட்டார் ஜெரோம். பதிலுக்கு தமது அணியினை முன்னிலைப்படுத்துவதற்கு மணற்காடு அணியினர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவற்றை பத்திரிசியாரின் பலம் மிக்க பின்களம் தடுத்தது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் டினியோ வழங்கிய பந்தினை தலையால் முட்டி கோலாக்கினார்  நிஷான். தொடர்ந்து 15ஆவது நிமிடத்தில் லியோவும் அடுத்த கோலைப் பெற்று முதற் பாதியிலேயே பத்திரிசியார் கல்லூரியின் முன்னிலையை உறுதி செய்தார்.

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 4 – 0 மணற்காடு றோ....பா

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே பந்தினை எதிரணியின் கோலை நோக்கி மணற்காடு அணி வீரர் மிதுசன் எடுத்துச் சென்ற போதும் இறுதி நேரத்தில் பத்திரிசியார் பின்கள வீரர்களால் பந்து தடுக்கப்பட்டது.

போட்டியின் 30ஆவது நிமிடத்தில் வலது பக்கத்திலிருந்து நேரடியாக கோலினை நோக்கி பந்தினை உதைந்து தனது இரண்டாவது கோலினைப் பெற்றார் லியோ.

மீண்டுமொருமுறை மணற்காடு அணியின் மிதுசன் கோலிற்கு முயற்சி செய்தபோதும் அம்முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

போட்டி நேர நிறைவில், தொடர் முழுவதும் அபாரங்காட்டிய வளர்ந்துவரும் அணியான மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியினை 5 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, 2017ஆம் ஆண்டிற்கான மைலோ கிண்ண போட்டியின் சம்பியனானது புனித பத்திரிசியார் கல்லூரி அணி.

புனித பத்திரிசியார் கல்லூரியின் 16 வயதின் கீழ் அணி இத்தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 5 – 0 மணற்காடு றோ....பா

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரிஜெராட் ஜெரோம் 3′ & 6′, றெக்ஸ் எடி நிஷான் 12’, அந்தோனிப்பிள்ளை லியோ 15′ & 30

மூன்றாமிடத்திற்கான போட்டி

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் மோதியிருந்த இப்போட்டியின் முதற் பாதியில் இரு அணியினருக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தபோதும், அவை சிறப்பான முறையில் நிறைவு செய்யப்படாது போக கோலேதுமின்றி நிறைவிற்கு வந்தது முதற்பாதி.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சென். ஜோன்ஸ் அணியினர் நழுவவிட்டனர்.

எந்தவித வெற்றியுமின்றி நாடு திரும்பும் இலங்கை கனிஷ்ட அணி

தஜிகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான 2018 ஆம் …

போட்டியின் 37ஆவது நிமிடத்தில் முதல் கோலினைப் போட்டார் ஆகாஷ். இறுதி நிமிடத்தில் மேலும் ஒரு கோலினை பவிந்தன் பெற்றுக்கொடுக்க, போட்டியின் நிறைவில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினை வெற்றிகொண்டு 3ஆம் இடத்தினை தம்வசப்படுத்தியது சென். ஜோன்ஸ் கல்லூரி.

கோல் பெற்றவர்கள்

சென். ஜோன்ஸ் கல்லூரி – நியூட்டன் ஆகாஷ் 37’, அன்பழகன் பவிந்தன் 40’ 

மைலோ கிண்ணம் 2017

14 வயதிற்குட்பட்டோர் பிரிவின் விருதுகள்

சம்பியன் அணி – புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்

இரண்டாவது இடம் – மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

மூன்றாவது இடம் – சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்

நான்காவது இடம் – புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – ஜெறாட் ஜெரோம் – புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்

தொடர் நாயகன் – றொபேர்ட் மிதுசன் – மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

சிறந்த கோல் காப்பாளர் – ஜிம்பிறியன் – சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்

கானவான் அணி (Fair play) – சென். ஜோன்ஸ் கல்லூரி,யாழ்ப்பாணம்