கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், மூன்று அணிகள் பங்குபெறுகின்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டிகளை ஒழுங்கு செய்து நடத்தவுள்ளனர்.
>> பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியளிக்கத் தயார் – ஹத்துருசிங்க
இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்டதாக இடம்பெறவுள்ள இந்த சுற்றுத்தொடரில் முன்னாள் வீரர்கள் அடங்கிய யாழ்ப்பாண மாஸ்டர்ஸ், தோமியன் மாஸ்டர்ஸ் மற்றும் கொழும்பு இணைப்பு மாஸ்டர்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன.
அதேநேரம், இந்த சுற்றுத் தொடரின் இரண்டு போட்டிகளும் செம்டம்பர் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதில் 05ஆம் திகதி நடக்கும் முதல் போட்டியில் யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணி, தோமியன் மாஸ்டர்ஸ் அணியினை எதிர்கொள்ளவுள்ளதுடன் 06ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டி யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணிக்கும் கொழும்பு இணைப்பு மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
அதேநேரம், இந்த சுற்றுத் தொடருக்கான அனுசரணையாளராக தோமியன் கல்லூரி மாணவர்கள் செயற்பட, சுற்றுத் தொடருக்கான பயண ஏற்பாடுகள் புனித தோமியர் கல்லூரியின் பழைய மாணவர் மைக்கல் ஆர்னோல்ட் இன் உதவியோடும் Ride for Ceylon அறக்கட்டளை இன் உதவியோடும் செய்யப்படவிருக்கின்றது.
இந்த சுற்றுத்தொடரினை ஒழுங்கு செய்ததன் மூலம் தோமியன் கல்லூரியின் முன்னாள் வீரர்கள் தமக்கு விருப்பமாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டினை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு எடுத்துச் சென்று குறித்த விளையாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதனை இலக்காக கொண்டிருக்கின்றனர்.
இந்த கண்காட்சி கிரிக்கெட் தொடர் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு ThePapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
>> பங்களாதேஷ் தொடருக்காக பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை அணி
தொடரில் விளையாடும் அணிகள் விபரம்
தோமியன் மாஸ்டர்ஸ் அணி
ஜோஹான் பீரிஸ், மஹிந்த ஹலகொட, அசங்க செனவிரத்ன, வஜிர விஜேகுணவர்தன, அனுர புலன்கலுமே, டீபல் அஹன்கம, அமித அபேயநாயக்க, இஷாக் ஷாப்தின், நளின் ஜயத்திலக்க, சுனில் விஜேரத்ன, திரான் தேனபந்து, சுரேஷ் புலன்குலமே, ரமேஷ் வணகுவட்டே, ரனேஷ் ரத்னதாஸ, நரேஷ் அதிகாரி, ருவான் சிரிசேன, யஷஷ்ரி மெண்டிஸ்
கொழும்பு இணைப்பு மாஸ்டர்ஸ் அணி
சேன் பெர்னாந்து, இயன் கொக்கின்ஸ், விஜயானந்த பெரேரா, சன்ஜீவ ரணதுங்க, சமிந்த மெண்டிஸ், துமிந்த நாணயக்கார, சுஜித் பெரேரா, லால் ரணசிங்க, ஜெரோம் சந்திரசேகர, டிர்க் பெரேரா, மோரிஸ் டி லா சில்வா, ஜகத் பெர்னாந்து
யாழ்ப்பாணம் மாஸ்டர்ஸ் அணி
நல்லையா தேவராஜன், ஹர்ரி வகீசன், J. வீரசிங்கம், S. தீலிபன், ஜெகன் பழனி, தயாளன் பார்ட்லேட், K. செல்வராஜா, A. எதிர்வீரசிங்கம், பாஸ்கரன், திலக், K. ராஜபத்மநாதன், நாதன், R. ராஜசூரி, K. சுதாகரன், N. தர்ஷன்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<