Home Tamil த்ரில் வெற்றியோடு பிளே-ஓப் வாய்ப்பினை உறுதி செய்த கண்டி அணி

த்ரில் வெற்றியோடு பிளே-ஓப் வாய்ப்பினை உறுதி செய்த கண்டி அணி

Lanka Premier League 2023

242

LPL கிரிக்கெட் தொடரில் இன்று மாலை (12) நடைபெற்ற ஜப்னா கிங்ஸ் –
பி-லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில் பி-லவ் கண்டி அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் பி-லவ் கண்டி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பிளே-ஓப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

மறுபுறத்தில் ஜப்னா கிங்ஸ் அணி இம்முறை போட்டிகளில் தமது 4ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் வாய்ப்பை மேலும் கேள்விக்குறியாக்கிக் கொண்டது

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பி-லவ் கண்டி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மொஹமட் ஹரிஸ் – பக்கர் ஜமான் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தனர். இதில் பக்கர் ஜமான் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், சஹன் ஆராச்சிகே, அஞ்செலோ மெதிவ்ஸ், வனிந்து ஹஸரங்க, ஆசிப் அலி என அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைச் சதம் கடந்த மொஹமட் ஹரிஸ் 2 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 81 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பி-லவ் கண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களைக் குவித்தது.

ஜப்னா கிங்ஸ் அணி தரப்பில் நுவன் துஷார 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகிய இருவருத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 179 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு நிஷான் மதுஷ்க – ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். இதில் குர்பாஸ் ஒரு ஓட்டத்தையும், நிஷான் மதுஷ்க 8 ஓட்டங்களையும், சரித் அசலங்க 2 ஓட்டங்களையும், கிறிஸ் லின் 27 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த சொஹைப் மலிக் – டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் சொஹைப் மலிக் அரைச் சதம் கடந்தார். தனது 2ஆவது LPL தொடரில் ஆடிய அவரது தொடர்ச்சியான 2ஆவது அரைச் சதம் இதுவாகும். மறுபுறத்தில் டேவிட் மில்லர் 24 ஓட்டங்களையும், அதிரடியாக ஆடிய திசார பெரேரா 36 ஓட்டங்களையும் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும், இறுதிவரை போராடிய சொஹைப் மலிக் 55 ஓட்டங்களை எடுத்தும் ஜப்னா அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெடுகளை இழந்து 170 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 8 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

கண்டி அணி தரப்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் 3 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் அரைச் சதமடித்து பி-லவ் கண்டி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மொஹமட் ஹாரிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இம்முறை LPL தொடரில் 6இல் 4 போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய  பி-லவ் கண்டி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதேசமயம் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி 7இல் 4 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Jaffna Kings
170/6 (20)

B-Love Kandy
178/8 (20)

Batsmen R B 4s 6s SR
Mohammad Haris b Dunith Wellalage 81 51 10 2 158.82
Fakhar Zaman b Nuwan Thushara 22 17 1 1 129.41
Dinesh Chandimal b Dunith Wellalage 1 3 0 0 33.33
Sahan Arachchige b Dilshan Madushanka 2 5 0 0 40.00
Angelo Mathews c David Miller b Nuwan Thushara 22 18 1 1 122.22
Wanindu Hasaranga c Thisara Perera b Nuwan Thushara 19 14 1 1 135.71
Asif Ali run out (Chris Lynn) 6 6 0 0 100.00
Isuru Udana c Thisara Perera b Dilshan Madushanka 9 6 0 1 150.00
Dushmantha Chameera not out 0 0 0 0 0.00
Mujeeb ur Rahman not out 1 1 0 0 100.00


Extras 15 (b 0 , lb 0 , nb 1, w 14, pen 0)
Total 178/8 (20 Overs, RR: 8.9)
Bowling O M R W Econ
Thisara Perera 1 0 5 0 5.00
Shoaib Malik 3 0 34 0 11.33
Maheesh Theekshana 4 0 34 0 8.50
Nuwan Thushara 4 0 31 3 7.75
Dunith Wellalage 4 0 43 2 10.75
Dilshan Madushanka 4 0 31 2 7.75


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Asif Ali b Angelo Mathews 8 9 1 0 88.89
Rahmanullah Gurbaz c Dinesh Chandimal b Angelo Mathews 1 2 0 0 50.00
Chris Lynn c Mohammad Haris b Nuwan Pradeep  27 26 4 1 103.85
Charith Asalanka c Dinesh Chandimal b Angelo Mathews 2 7 0 0 28.57
Shoaib Malik not out 55 37 4 1 148.65
David Miller b Isuru Udana 24 16 4 0 150.00
Thisara Perera c Dinesh Chandimal b Nuwan Pradeep  36 20 2 2 180.00
Dunith Wellalage not out 6 5 0 0 120.00


Extras 11 (b 4 , lb 0 , nb 2, w 5, pen 0)
Total 170/6 (20 Overs, RR: 8.5)
Bowling O M R W Econ
Angelo Mathews 3 0 10 3 3.33
Mujeeb ur Rahman 3 0 23 0 7.67
Wanindu Hasaranga 2 0 22 0 11.00
Dushmantha Chameera 4 0 33 0 8.25
Nuwan Pradeep  4 0 48 2 12.00
Isuru Udana 4 0 30 1 7.50



  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<