17 வயதின்கீழ் மாவட்ட சம்பியனாக முடிசூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி

442

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 17 வயதுப் பிரிவு அணிகளிற்கிடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினை 38 ஓட்டங்களால் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தினை தமதாக்கினர் டினோசன் தலைமையிலான சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 

அபிஷேக், எபனேசர் அசத்த யாழ் மத்தியை இலகுவாக வென்ற சென் ஜோன்ஸ்

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட்….

மொத்தமாக 10 அணிகள் பங்கெடுத்திருந்த இந்த போட்டித்தொடரின் அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினை வெற்றிகொண்டு சென். ஜோன்ஸ் அணியினரும், யாழ் மத்திய கல்லூரி அணியினை வெற்றிகொண்டு கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினரும் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தனர்.

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதி மோதலின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென். ஜோன்ஸ் வீரர்களை ஆரம்பம் முதலே அழுத்தத்திற்கு உள்ளாக்கினர் கொக்குவில் வீரர்கள்

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வினோஜன் அதிகபட்சமாக 14 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க, அடுத்து வந்த நான்கு வீரர்களையும் ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழக்க செய்தனர் கொக்குவில் இந்துவின் கௌதமன், தனோஜ் இணை

பின்னர் முறையே ஆறாம், ஏழாம் இலக்கத்தில் களத்திற்கு நுழைந்த பிரணவன் மற்றும் டினோசன் முறையே 36 மற்றும் 30 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க போட்டியிடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர்ந்தது சென். ஜோன்ஸ் அணி

Photos: Jaffna Central College vs St. John’s College | U15 JDSCA Trophy 2019 | Finals

ThePapare.com | Saravanan Murugaiah | 31/08/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

கடைநிலை ஆட்டக்காரர் சங்கீர்த்தனன் 29 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க தமது முதல் இன்னங்சிற்காக சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 167 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.  

சென். ஜோன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தினேஷ்குமார் 5 விக்கெட்டுக்களை தன்வசப்படுத்தினார். தனோஜ்  மற்றும் கௌதமன் ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்

அதனைத் தொடர்ந்து 168 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆரம்ப வீரர் பிரவீனது விக்கெட்டினை 11 ஓட்டங்களிற்கு பறிகொடுத்தபோதும், மறுமுனையில் ஐனார்த்தனன் நிதானமாக துடுப்பெடுத்தாடினார்.  

தொடர்ந்துவந்த வீரர்களை டினோசன், சரண் இணை விரைவாக ஆடுகளத்திலிருந்து வெளியேற்றினர். நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஐனார்த்தனன் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சென். ஜோன்ஸ் வீரர்களது வெற்றி உறுதியாகியது.

இதனால், 43.3ஆவது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த கொக்குவில் வீரர்கள் 129 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். எனவே, குறைந்த வெற்றியிலக்கினை நிர்ணயித்த போதும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சென். ஜோன்ஸ் வீரர்கள் 38 ஓட்டங்களால் வெற்றியினை தமதாக்கினர்

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி 167/10 (42.2) பிரணவன் 36, டினோசன் 30, சங்கீர்த்தனன் 29, தினேஷ்குமார் 5/19, தனோஜ் 3/19, கௌதமன் 2/50 

கொக்குவில் இந்துக் கல்லூரி 129/10 (43.3) ஐனார்த்தனன் 41, சரண் 3/11, டினோசன் 3/11, தமிழ்கதிர் 2/33   

விருதுகள்

  • ஆட்ட நாயகன் டினோசன் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் ஐனார்த்தனன் (கொக்குவில் இந்துக் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் தினேஷ்குமார் (கொக்குவில் இந்துக் கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர் பிரணவன் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
  • எதிரணியின் சிறந்த வீரர்  – தனோஜ் (கொக்குவில் இந்துக் கல்லூரி)
  • போட்டி முடிவு – 38 ஓட்டங்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<