2016ஆம் ஆண்டில் தேசிய ரீதியாக இடம்பெற்ற இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று யாழ் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த இளைஞர்களை கௌரவிப்பதற்காகவும், தொடர்ந்தும் இத்துறைகளில் அவர்களது செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ். மாவட்ட இளைஞர் வர்ண இரவு நிகழ்வு இனிதே நிறைவடைந்துள்ளது.
யாழ்.மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊழியர் நலன்புரிச் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் சிவன் வேலாயுதம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான க.விந்தன், அ.பரஞ்சோதி, கஜதீபன் உட்பட விளையாட்டுத்துறையின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வு திருநேல்வேலி லக்ஷ்மி மண்டபத்தில் சங்கத்தின் செயற்பாட்டுத் தலைவரான யுகராஜ் தலைமையில் இடம்பெற்றிருந்தது. தலைமையுரையில் யுவராஜ் கருத்து தெரிவிக்கையில் “கடந்த காலங்களை விட 2016ஆம் ஆண்டில் யாழ் விரர்கள் ஏனைய மாவட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்து பல பதக்கங்களைத் தமதாக்கியுள்ளனர். அவ்வாறே இனிவரும் காலங்களில் பதக்கங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.., அதிகரிக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தின் பல முன்னனி விளையாட்டு நட்சத்திரங்கள் விருதுகளைப் பெற்றிருந்தனர்
2016ஆம் ஆண்டிற்கான இளைஞர் விருது பெற்றோர் விபரம்
வலைப்பந்து (ஆண்கள்) – தங்கம்
கிரிஷாந், வாகிசன், ஜெகதீஸ்வரன், ஹர்சன், தயாளன், கிஷாந்த், பிரஷாத்மன், சசிந்திரன், விஜிதரன், சசிகரன், அன்ரன் யோவநாதன், கபிலன்
- யசிதரன் – பயிற்றுவிப்பாளர்
- யுகராஜ் – அணி முகாமையாளர்
கூடைப்பந்து (பெண்கள்) – தங்கம்
கமலினிமில்ஸ், வேனிதா, கோபிகா, சுபிஸனா, பானு, தமிழரசி, தர்சிகா, மடோனா, கஜானி, கேதுஷா, ஐஸ்வர்யா, ஹெப்ஸிபா
- சசிகரன் – பயிற்றுவிப்பாளர்
- சபேசன் – அணி முகாமையாளர்
கூடைப்பந்து (ஆண்கள்) – வெள்ளி
அபிகரன், பவன், கிரிஷாந், வாகிசன், ஜெகதீஸ்வரன், ஹர்சன், சுஜீந்திரன், துவாரகன், தயாளன், கிசாந்த், பிரசாத்மன், சசிந்திரன்
- சிவதாஸ் – பயிற்றுவிப்பாளர்
- யுகராஜ் – அணி முகாமையாளர்
கயிறிழுத்தல் (பெண்கள்) – வெள்ளி
தாட்ஷாயினி, டேர்மியா, திவ்யா, பிரதீபா, வர்ணிகா, மயூரி, கலைவாணி, தீபாஜினி, நிலாயினி, தனுசா
- பிரதீபன்,கஜன் – பயிற்றுவிப்பாளர்கள்
- அனுசன் –அணி முகாமையாளர்
வலைப்பந்து (பெண்கள்) வெண்கலம்
கீர்த்திகா, அபிதா, நளாயினி, எழிலேந்தினி, விதுரா, வேனுஜா, திவ்யா, துஷியந்தி, சக்தி, சபரிசானுஜா, பார்த்தீபா
- சபேஷன் – முகாமையாளர்
கபடி(பெண்கள்) வெண்கலம்
றொக் புளோரன்ஸ், றொக் நிலாயினி, ஜென்சி, ஜெனுமி, உஷாந்தினி, டிலக்ஸனா, சிவராஜினி, சிவரஞ்ஜினி, சிவானுஜா
- ரஜீவன் – அணி முகாமையாளர்
துடுப்பாட்டம் ( பெண்கள்) வெண்கலம்
றஜித்தா, சுகன்யா, டிலானி, சோபிகா, தேனுசா, நிந்துஸா, ஜெயரஞ்சினி
- சுகிர்தன் – பயிற்றுவிப்பாளர்
- மதன்ராஜ் – அணி முகாமையாளர்
தடகளம்
- செந்தூரன் – ஈட்டி எறிதல், 20 வயதிற்கு மேல் ஆண்கள் – வெள்ளி
- பிரகாஷ்ராஜ் – தட்டு எறிதல், 20 வயதிற்கு கீழ் ஆண்கள் – வெண்கலம்
மேலும் Youth got talent போட்டியில் இறுதிக்குள் நுழைந்திருக்கும் அன்ரன் சார்ள்ஸும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் இறுதியில் யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவரான ஐ.தவேந்திரன் Thepapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில்,
“யாழ். மாவட்ட இளைஞர்களால் குழு விளையாட்டுக்களில் தேசிய ரீதியில் ஓரளவிற்குச் சாதிக்க முடிகின்ற போதும், தனி நபர் போட்டிகளில் சாதிப்பதென்பது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை ஆராய்கின்றபோது, யாழ்ப்பாணத்தில் விளையாட்டிற்காக நீச்சல் தடாகம், உடற்பயிற்சி நிலையம், விடுதி போன்றவற்றை உள்ளடக்கிய விளையாட்டு/இளைஞர் மத்திய நிலையம் இன்மையே வெற்றிகளுக்கு பிரதான தடையாக உள்ளது.
அதேவேளை, கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் சாதிக்கக்கூடிய வீரர்களை உருவாக்குவதற்கேற்ற உள்ளக அரங்குகள் இல்லை. மேலும், கோப்பாயில் வெகு விரைவில் அமையவிருக்கும் இளைஞர் மத்திய நிலையத்தில் 400m சுற்றளவு கொண்ட மைதானம், உடற்பயிற்சி நிலையம், நீச்சல் தடாகம், வீரர்களுக்கு எற்றதான உணவகம், தங்கி நின்று பயிற்சி பெறுவதற்காக விடுதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைக்கவும் அங்கு உள்ளுர், தேசிய மற்றும் வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சிகளை வழங்கவும் வட மாகாண சபை உட்பட, உரியவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்” என குறிப்பிட்டார்.