டிவிஷன் – II பாடசாலை தொடர் இறுதிப் போட்டியில் யாழ். மத்தி

376

2023ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன்-II பாடசாலை அணிகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி பெற்றிருக்கின்றது. 

இலங்கை – ஜிம்பாப்வே போட்டி அட்டவணையில் மாற்றம்

அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி Tier B அணிகளுக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு அசோகா வித்தியாலயத்தினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த இந்த தொடரின் இறுதிப் போட்டி நாளை (15) பண்டாரகம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது தொடரின் அரைறுதிப் போட்டியில் அம்பலங்கொடை P.De.S. குலரத்ன கல்லூரியினை வீழ்த்தியிருந்ததோடு, அசோக வித்தியாலய அணியானது கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நிசாந்தன் அஜய் மூலமும், அசோக வித்தியாலய அணி உமேஷா கல்தார மூலமும் வழிநடாத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<