இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>டொம் ஹார்ட்லியின் சுழலில் வீழ்ந்தது இந்தியா
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருக்கின்றது.
விடயங்கள் இவ்வாறிருக்கும் நிலையிலையே இந்திய டெஸ்ட் அணியில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன்படி இங்கிலாந்து – இந்திய அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் தசை உபாதைக்குள்ளான ரவீந்திர ஜடேஜா மற்றும் KL ராகுல் ஆகியோர் இரண்டாவது டெஸ்டிற்கான இந்திய குழாத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்குப் பதிலாக சர்பராஸ் கான் மற்றும் சௌராப் குமார் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த வீரர்களில் சர்பராஸ் கான் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருக்க, சௌராப் குமார் பந்துவீச்சில் அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்டிற்கான இந்திய குழாம்
ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எஸ். பாரத், த்ருவ் ஜூரேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, அவேஷ் கான், ரஜாட் பட்டிதார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌராப் குமார்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<