அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்ற உரிமையினை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் (ITN) பெற்றுக் கொண்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை முதலில் அறிவிக்கப்பட்டது.
LPL தொடரின் பிரதான அனுசரணையாளராக My11Circle
அதன்பிறகு கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட நிர்வாகக் காரணங்களால் போட்டியை உரிய தினத்தில் ஆரம்பிக்க முடியாமல் போனதுடன், காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், காலி கிளெடியேட்டர்ஸ், தம்புள்ளை வைக்கிங்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் என ஐந்து அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
முன்னதாக லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை சொனி ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி பெற்றுக் கொண்டது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும், பாகிஸ்தானின் ஒளிபரப்பு உரிமத்தை பி.டி.வி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ டிவி சுப்பர் ஆகிய தொலைக்காட்சிகளும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் இரசிகர்ளுக்கு எந்த தொலைக்காட்சியில் வாயிலாக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரை பார்க்க முடியும் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139
இந்த நிலையில், லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரின் இலங்கைக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிக்கு (ITN) வழங்கப்பட்டதாக இன்று (17) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதேநேரம், லங்கா ப்ரீமியர் லீக் தொடரை இலங்கையில் ஒளிபரப்பு செய்கின்ற உரிமையினை பெற்றுக்கொண்டது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் சுதத் ரோஹான கருத்து தெரிவிக்கையில்,
”விளையாட்டு என்பது அனைவரையும் சென்றடைந்துள்ளது. மேலும், அதன் செயற்பாடுகள் மற்றும் சொற்களின் மூலம் நேர்மறையான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான மகத்தான சக்தியையும் அது கொண்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் கிரிக்கெட் என்பது அனைவரையும் இணைத்துக் கொள்ளக்கூடிய விளையாட்டாகும். அத்துடன், தீவுகளாக காணப்படுகின்ற நாடுகளில் அந்த வகையான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய விளையாட்டு.
ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி
எனவே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரின் ஒரு பங்காளராக இணைந்து கொள்ள கிடைத்தமை எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.
அதேபோல, இது சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும், கிரிக்கெட் மூலம் தேசத்தை வளர்க்க உதவுவதில் நீண்ட தூரம் செல்லும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான ஒளிபரப்பு உரிமைத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்களுக்கு டுபாயை தளமாகக் கொண்ட ஐ.பி.ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனில் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இந்த மதிப்புமிக்க போட்டித் தொடரில் எமது ஒளிபரப்பு பங்காளர்களாக ஸ்கை ஸ்போர்ட்ஸ், சோனி நெட்வேர்க்ஸ், ஜியோ மற்றும் பி.டி.வி ஆகிய நிறுவனங்களை வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
எல்.பி.எல் என்ற நாமத்துக்கு அவர்களின் தொடர்பு ஒரு சிறந்த சான்று என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அத்துடன், அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் அவர்கள் இணைந்து கொண்டமை மிகப் பெரிய ஊக்கமளிக்கிறது.
கொழும்பு, தம்புள்ளை அணிகளுக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்!
அதுமாத்திரமின்றி, லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி இணையவழி விளையாட்டு தளங்களில் ஒன்றான மைலெவன்சர்க்கிள் (My11Circle) நிறுவனம் பல கோடி ரூபாய் பணத்துடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளது.
இதனால் லங்கா ப்ரீமியர் லீக் T0 தொடரானது மைலெவன்சர்க்கிள் லங்கா ப்ரீமியர் லீக் என்று அழைக்கப்படும” என அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<