இறுதி 16இல் இத்தாலி

308
Italy v Sweden

யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற  லீக் போட்டியில் இத்தாலி – சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதல் பாதி நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2ஆவது பாதி நேரத்தில் இரு அணிகளின் வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

ஆட்டம் முடியும் தருவாயில், 88ஆவது நிமிடத்தில் இத்தாலிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தின் மையப்பகுதியில் இருந்து இத்தாலியின் சியேல்லினி பந்தை தூக்கி அடித்தார். இந்த பந்தை சஸா அருமையாகத் தடுத்து ஈடருக்கு அனுப்பினார். அவர் சுவீடன் தடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றி கோல் அடித்தார். ஆகவே, இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் சுவீடன் அணியால் பதில் கோல் போடமுடியவில்லை. இதனால் இத்தாலி 1-0 என வெற்றிபெற்றது.

ஏற்கனவே பெல்ஜியத்தை 2-0 என இத்தாலி வெற்றி பெற்றுள்ளதால் இரண்டு வெற்றிகள் மூலம் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்