இத்தாலியைச் சேர்ந்த துடுப்புப் படகுப் போட்டி வீரர் வின்சென்ஸோ அபாக்னெல் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்த விசாரணை இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இவர் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ரோம் நகரின் தெற்கு கடற்பகுதியான சபாயுடியாவில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் பரிசோதனைக்கு உடன்படவில்லை.
இதனால் அவருக்கு இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் ஊக்கமருந்து தடுப்பு நீதிமன்றம் 16 மாதம் தடைவிதித்துள்ளது. இவரது தண்டனைக்காலம் அடுத்த வருடம் அக்டோபர் 19ஆம் திகதிதான் முடிவடையும்.
இவரது தந்தையான ஜியுசெப்பே அபாக்னெல் இத்தாலி துடுப்புப் படகு பெடரேஷன் தலைவராக உள்ளார். இவர் தன் மகனுக்கு இந்தக் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வின்சேன்ஸோ கூறுகையில் ‘‘இது தானாகவே நடந்த சம்பவம். இதனால் நான் 3ஆவது டெஸ்ட்டை தவறவிட்டேன்” என்றார்.
தென்கொரியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலகச் சாம்பியன் தொடரில் பதக்கம் வென்ற இவர், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்