தென்னாபிரிக்க அணியுடனான இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் கலந்துகொள்வதற்கு இரு அணியினரும் பூரண தயார் நிலையில் உள்ளனர்.

டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணியும், T-20 தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், தீர்க்கமான இந்த இறுதித் தொடரைக் கைப்பற்றும் ஒரே இலக்குடனேயே இரு தரப்பினரும் உள்ளனர்.   

இவ்வாறான ஒரு நிலையில், இதற்கு முன்னதாக கடந்த காலங்களில் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டிகளின் நிலைமை எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஒரு ஆய்வை மேற்கொள்வோம்.  

கடந்த 1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உலக கிண்ணத்திலேயே இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி இடம்பெற்றது. நிறவெறி கொள்கை காரணமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி, நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகுந்த போட்டி பசியுடன் காலடி எடுத்து வைத்த நிலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றது.   

1992ஆம் அண்டு மார்ச் 2ஆம் திகதி வெலிங்டன், பேசின் ரிசர்வ்வில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இறுதி 9 விக்கெட்டுகளும் இலங்கை அணியால் 81 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

சிறப்பாக துடுப்பாடிய பீட்டர் கர்ஸ்டன் கூடிய ஓட்டங்களாக 47 ஓட்டங்களைப் பதிவு செய்த அதேவேளை, டொன் அனுரசிறி 41 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 195 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணியை, அக்காலத்தில் பந்து வீச்சில் அச்சுறுத்திய ஆலன் டொனல்ட் 35 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்தினார்.

எனினும் அதன் பின்னர், துடுப்பாட்டத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்திலிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொஷான் மஹானாமவுடன் நான்காவது விக்கெட்டிற்காக இணைந்து கொண்டகேப்டன் கூல்என்று செல்லமாக அழைக்கப்பட்ட அருஜுன ரணதுங்க 67 ஓட்டங்களை பெற்று அணிக்கு புத்துயிர் கொடுத்தார்.

ரொஷான் மஹானாம 68 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்திய அதேவேளை, தன்னுடைய அழகான துடுப்பாட்டத்தினால் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை விளாசி தென்னாபிரிக்க அணியை மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற வழி நடத்தினார்.

அதேநேரம், 1975ஆம் ஆண்டிலிருந்து உலக கிண்ணத்தில் பங்குபற்றி வந்த இலங்கை அணி பதிவு செய்த நான்காவது உலகக் கிண்ணப் போட்டி வெற்றியாகவும் குறித்த வெற்றி பதிவாகியது. அதேநேரம் அரையிறுதிக்கு தகுதி பெற்ற தென்னாபிரிக்க அணியை இலங்கை வெற்றிகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1993ஆம் ஆண்டு R. பிரேமதாச அரங்கில் நடைபெற்ற இலங்கையுடனான ஒருநாள் போட்டியில், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே 124 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி கொண்டது. இதுவே இலங்கைக்கு எதிராக அவ்வணி பெற்ற முதல் வெற்றியாகும்.

2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணம்

யாரும் மறந்திருக்க முடியாத ஒரு தொடரான 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்தில், B குழுவில் இடம்பெற்றிருந்த இவ்விரு அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டிகளுக்காக தகுதியைப் பெற்றுக்கொள்வதற்காக இடம்பெற்ற விறுவிறுப்பான  போட்டியில், ஆட்டத்தின்போது பெய்த மழை காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி சமநிலையுற்றது. எனவே, வலிமைமிக்க தென்னாபிரிக்க அணி உலக கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியது.

இரு அணிகளுக்கிடையிலான வெற்றி தோல்வி விபரம்

மொத்த போட்டிகள்

இலங்கை வெற்றி தென்னாபிரிக்கா வெற்றி சமநிலை

முடிவற்ற போட்டி

60

29 29 1

1

அண்மைக்காலப் போட்டிகள்

கடந்த 2011/12 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா – இலங்கை இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில், தென்னாபிரிக்க அணி 3-2 என்ற அடிப்படையில் தொடரை வெற்றிகொண்டது. அதேநேரம், இலங்கை மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 4-1 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி முன்னைய தோல்விக்கு பதில் கொடுத்தது.

அதேநேரம், அதற்கடுத்த ஆண்டில் மீண்டும் இலங்கை வந்த தென்னாபிரிக்க அணி, 2-1 என்ற வீதத்தில் சொந்த மண்ணில் இலங்கையை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

இறுதியாக இவ்விரு அணிகளும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் காலிறுதிப் போட்டியில் மோதியது. அதன்போது, தென்னாபிரிக்க அணி 192 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுகளால் பாரியதொரு வெற்றியை பதிவு செய்து கொண்டது.

குறித்த போட்டியில், தென்னாபிரிக்க அணியில் தற்பொழுதும் விளையாடி வரும் இம்ரான் தஹிர் மற்றும் ஜேபி டுமினியின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்ட இலங்கை அணி 37.2 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்குள் சுருண்டது. குறித்த போட்டியில் இம்ரான் தஹிர் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் அவ்வணியில் இடம் பிடித்திருந்த ஒரு சிலர் தவிர்ந்த ஏனைய அனைவரும் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற போட்டிகளின் விபரங்கள்

மகிழ்ச்சியான விடயம் என்னவெனின், 1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச  போட்டியில் இலங்கை வீரர்கள் 35 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்து கொண்டனர்

தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற போட்டிகளின் விபரம்

மொத்த போட்டிகள்

தென்னாபிரிக்க அணி வெற்றி இலங்கை அணி வெற்றி போட்டி சமநிலை
23 15 7

1

புனித ஜோர்ஜ் பார்க், போர்ட் எலிசபெத்

  • நடைபெற்ற போட்டிகள் – 03
  • தென்னாபிரிக்கா வெற்றி – 02
  • இலங்கை வெற்றி 01 ஷ

வாண்டரர்ஸ், ஜோகன்னஸ்பர்க்

  • நடைபெற்ற போட்டிகள் – 04
  • தென்னாபிரிக்கா வெற்றி – 02
  • இலங்கை வெற்றி – 02

நியூலேண்ட்ஸ், கேப் டவுன்

  • நடைபெற்ற போட்டிகள் – 01
  • தென்னாபிரிக்கா வெற்றி – 01   

சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்

  • நடைபெற்ற போட்டிகள் – 02
  • இலங்கை வெற்றி – 01

துடுப்பாட்ட சாதனைகள்

  • கூடிய ஓட்டங்கள் – குமார் சங்கக்கார (1,789 ஓட்டங்கள் – 43 போட்டிகள்) (சராசரி 45.87)
  • ஜக் கலிஸ் (1,434 ஓட்டங்கள் – 36 போட்டிகள் (சராசரி. 46.25)
  • தென்னாபிரிக்க மண்ணில் கூடிய ஓட்டங்கள் – ஜக் கலிஸ் (719 ஓட்டங்கள் – 17 போட்டிகள்) (சராசரி 51.35)
  • தென்னாபிரிக்க மண்ணில் கூடிய ஓட்டங்கள் பெற்ற இலங்கை வீரர் மாவன் அத்தபத்து (591 ஓட்டங்கள் – 15 போட்டிகள்) (சராசரி 45.46)
  • ஒரு போட்டியில் கூடிய ஓட்டங்கள்/இலங்கை – குமார் சங்கக்கார (169 ஓட்டங்கள்  R.பிரேமதாச அரங்கு, 2013)
  • ஒரு போட்டியில் கூடிய ஓட்டங்கள்/தென்னாபிரிக்கா– குவிண்டான் டி கொக் (128 ஹம்பாந்தொட்ட, 2013)
  • ஒரு போட்டியில் கூடிய ஓட்டங்கள்/தென்னாபிரிக்க மண்ணில் ஏபி டி வில்லியர்ஸ் (125* – ஜொகன்னஸ்பர்க் ,2012),
  • கிரேம் ஸ்மித் (125 – ஜொகன்னஸ்பர்க், 2012)

பந்து வீச்சு சாதனைகள்

  • கூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்: ஷேன் பொலக், (போட்டிகள் – 51 விக்கெட்டுகள் – 35)  (சராசரி 23,90.)
  • முத்தையா முரளிதரன் (போட்டிகள்: 32 , விக்கெட்டுகள் 49 ) (சராசரி 23,34.)
  • தென்னாபிரிக்க மண்ணில்ஷேன் பொலக் (போட்டிகள் – 14, விக்கெட்டுகள் – 26) (சராசரி 17,76.)
  • தென்னாபிரிக்க மண்ணில் கூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்: சமிந்த வாஸ் (போட்டிகள் -17 , விக்கெட்டுகள்- 20 ) (சராசரி 31,10)
  • சிறந்த பந்து வீச்சு: லான்ஸ் க்ளுஸ்னர் (49 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள்  லாகூர், 1997)
  • நுவான் சொய்சா (26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் – R.பிரேமதாச அரங்கு, 2004)