பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் இலங்கையை வீழ்த்தினோம் – வில்லியம்சன்

158
New Zealand Cricket

இலங்கை அணியை வீழ்த்துவதற்கு பந்துவீச்சில் யுக்திகளைக் கையாண்டதாகவும், அதற்கு ஏற்ப தமது வீரர்கள் போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், நேற்று (01) நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை இலகுவாக வீழ்த்தியது.

இந்த நிலையில், இலங்கை அணியுடனான வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில்,

”பந்து வீச்சாளர்களிடமிருந்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டோம். இதுபோன்ற ஆடுகளங்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா என நான் நினைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது. ஆனால் நீங்கள் நிதானமாக விளையாடி இருந்தால் ஓட்டங்களைக் குவித்திருக்கலாம். எது எவ்வாறாயினும் எமது பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தனர்.

தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன

கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள்…

அதேபோல, எமது பந்துவீச்சில் ஒருசில யுக்திகளையும் கையாண்டோம். ஒருநாள் போட்டிகளைப் பொருத்தமட்டில் வித்தியாசமான ஆடுகளங்கள் எமக்கு கிடைக்கலாம். அதில் அதிகளவு ஓட்டங்களைக் குவிக்கின்ற ஆடுகளத்தைப் போல இதுபோன்ற பந்துவீச்சு ஆடுகளங்களிலும் விளையாட வேண்டிவரும்.

எனவே அதற்கு நாங்கள் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எங்களுக்கு ஓட்ட சராசரியில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் மார்டின் கப்டில் மற்றும் கொலின் மன்ரோ ஆகிய இருவரும் ஆக்ரோஷமாக விளையாடியிருந்தனர். அவர்கள் சுதந்திரமாக துடுப்பெடுத்தாடியிருந்தது பாராட்டத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் இந்தப் போட்டியில் எமது வீரர்கள் சகலதுறையிலும் பிரகாசித்திருந்தனர். எனவே ஒருசில நாட்களில் நடைபெறவுள்ள அடுத்த போட்டிக்கு எமது கவனத்தை கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

இதேவேளை, நியூசிலாந்து அணி எதிர்வரும் 9 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<