இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் பதவியேற்கும் நிகழ்வும் அது தொடர்பான ஊடக சந்திப்பும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை (5) நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆத்தர், டிசம்பர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் அடுத்த இரண்டு வருட காலத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் “ஆலோசக தலைமைப் பயிற்சியாளர்” பதவியினைப் பொறுப்பேற்கின்றார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மிக்க ஆர்த்தர்
தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான்………..
இதற்கு முன்னர் 2005 தொடக்கம் 2010 வரையிலான காலப்பகுதியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்த மிக்கி ஆத்தர், அதன் பின்னர் 2011 தொடக்கம் 2013 வரையிலான காலப்பகுதியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் கடைமையாற்றியதுசெயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆத்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி T20 அணிகளின் தரவரிசையில் முதல் இடத்திற்கு வர உதவியிருந்ததோடு அவ்வணி ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தை முதல் தடவையாக வெல்லவும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
இவ்வாறாக கிரிக்கெட் பயிற்றுவிப்பில் பாரிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் மிக்கி ஆத்தர் கடந்த 8 வருடங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறும் 11ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்கி ஆத்தரின் நியமனத்தோடு இலங்கை கிரிக்கெட் சபை, இன்னும் 5 பேரின் புதிய நியமனங்களையும் அறிவிப்புச் செய்திருந்தது.
கிரான்ட் ப்ளவர் – தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்
டேவிட் சேக்கர் – தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளர்
சேன் மெக்டர்மட் – தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர்
ஜெரோமேம் ஜயரத்ன – கிரிக்கெட் விடயங்களுக்கான சிரேஷ்ட உத்தியோகத்தர் (Chief Cricket Operating Officer)
டிம் மெக்கஸ்கில் – தேசிய கிரிக்கெட் அணியின் விருத்தி தலைமைப் பொறுப்பாளர் (Head of National Cricket Development)
டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தினை பின்தள்ளிய விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) டெஸ்ட்…………
அதேவேளை மிக்கி ஆத்தர் தனது பதவியேற்பு நிகழ்வின் போது ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“இங்கே (இலங்கையில்) திறமைகள் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால், அவர்களுக்கு அவர்களின் திறமையினை பாவிக்க வேண்டிய தருணத்தில் சந்தர்ப்பத்தில் அதனை பாவிக்கும் விதத்தினைக் கற்று கொடுப்பது எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றது. எங்களுக்கு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிலும், T20 உலகக் கிண்ணத்திலும் விளையாட வேண்டிய இருக்கின்றது. நாங்கள் அவற்றில் வெற்றியினைப் பெற வேண்டிய நிலையில்ும் இருக்கின்றோம். எப்போது மைதானத்திற்கு எப்போதுச் செல்லும் போதும் நாம் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட்டினை பெருமையாக கருதும் நாடு ஒன்றினை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எனவே, நாம் விளையாடும் போட்டிகள் அனைத்தினையும் வெல்ல வேண்டும்.”
“எனது தாரக மந்திரம் கடினமான உழைப்பாகும். நான் பாகிஸ்தானுக்கு வரும் போது அவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து பின்னர் முன்னேறினார்கள். அங்கே (பாகிஸ்தானில்) வீரர்கள் முன்னேறுவதனை அவதானிப்பது எனக்கு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. நான் இலங்கை வீரர்களின் உடற்தகுதியினை கண்டு வியப்புக்கு உள்ளாகியிருக்கின்றேன். எங்களுக்கு எப்போதும் முன்னேற முடியும். நாங்கள் உலகில் சிறந்த வீரர்கள் தயராகுவது போன்று தயராகுவோம்.”
அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு எப்படி தயாராகும் எனக் கேட்கப்பட்டிருந்த போது மிக்கி ஆத்தர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கு எங்களுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கின்றதுன. இவ்வாறான நிலையில் அடுத்த ஜனவரியில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இடம்பெறும் T20 தொடர் எமக்கு மிக முக்கியமானது. எங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மாற ஒரு சிறந்த வடிவமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வடிவமைப்பிற்கு கீழ் எங்களது வீரர்களை கொண்டு வர வேண்டி இருப்பதோடு, சரியான அணித்தேர்வு மூலம் அவர்களுக்கான பொறுப்புக்களையும் தெளிவாக வைத்திருக்க வேண்டும். அவுஸ்திரேலியா உண்மையில் கிரிக்கெட் விளையாட கடினமான ஒரு இடம். ஆனால், நாம் அங்கே போட்டியிடக்கூடிய ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.”
மிக்கி ஆத்தரின் ஆளுகையில் வரும் இலங்கை கிரிக்கெட் அணி, முதலாவதாக பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஜனவரியில் இந்தியாவுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<