Home Tamil சமநிலையில் முடிவடைந்த 60ஆவது ‘சகோதரர்களின் சமர்’

சமநிலையில் முடிவடைந்த 60ஆவது ‘சகோதரர்களின் சமர்’

60th Battle of the Brothers

267

ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச்சின்ன கிண்ணத்திற்காக இசிபதன மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 60ஆவது ‘சகோதரர்கள் சமர்’ எனப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் வருடாந்த கிரிக்கெட் சமர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இதன் மூலம் சகோதரர்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 49ஆவது தடவையாக சமநிலையில் நிறைவடைந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் நேற்று முன்தினம் (24) ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியினை வெற்றி கொண்ட இசிபதன கல்லூரியின் தலைவர் நவீன் கனிஷ்க முதலில் தர்ஸ்டன் கல்லூரி அணியினரை துடுப்பாடுமாறு பணித்தார்.

இதன்படி, களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனூஜ ராஜபக்ஷ (56) மற்றும் உமேஷ் இமேஷ் ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது.

இசிபதன கல்லூரியின் பந்துவீச்சில் சஹன் விராஜ் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அணித் தலைவர் நவீன் கனிஷ்க 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இசிபதன கல்லூரி அணி 211 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தருஷ்க அசேல் அரைச் சதம் கடந்து 72 ஓட்டங்களையும், யெசித் களுபஹன 51 ஓட்டங்களையும் அதிபட்சமாக எடுத்தனர்.

தர்ஸ்டன் கல்லூரி அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த விஹாஸ் தெவ்மிக 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 25 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த 140 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது போட்டியின் நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சானிக்ய தேஷப்பிரிய அரைச் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், தனூஜ ராஜபக்ஷ 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.

இதன் மூலம் இறுதியாக 2019இல் நடைபெற்ற சகோதரர்களின் சமரில் தர்ஸ்டன் கல்லூரி அணி வெற்றியீட்டியதால் ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச்சின்ன கிண்ணத்தை அந்த அணியே தக்கவைத்துக்கொண்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 43ஆவது தடவையாக நடைபெறவுள்ள 50 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விருது பெற்றவர்கள்

  • சகல துறை ஆட்டக்காரர் – உஷான் இமேஷ் (தர்ஸ்டன் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – சஹன் விராஜ் (இசிபதன கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – தரூஷ நெத்சர (இசிபதன கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – தருக்ஷ அஷேல் (இசிபதன கல்லூரி)
  • சிறந்த அதிரடி ஆட்டக்காரர் – சானிக்ய தேஷப்பிரிய (தர்ஸ்டன் கல்லூரி)
  • ஆட்ட நாயகன் – விஹாஸ் தெவ்மிக (தர்ஸ்டன் கல்லூரி)

Result

Match drawn

Thurstan College
186/10 (52.5) & 140/2 (36.4)

Isipathana College
211/10 (78.5)

Batsmen R B 4s 6s SR
Thanuga Palihawadana lbw b Sahan Viraj 4 14 0 0 28.57
Thanuja Rajapaksha c Sithuka Gunawardane b Naveen Kanishka 56 75 3 4 74.67
Thenuka Dewappriya c Sithuka Gunawardane b Kevin Samuel 0 3 0 0 0.00
Shanikiya Deshapriya c Tharusha Nethsara b Naveen Kanishka 27 26 6 0 103.85
Vihas Thewmika c Tharusha Nethsara b Sahan Viraj 10 39 1 0 25.64
Navindu Dulan c Themiya Gunarathne b Sahan Viraj 22 94 1 0 23.40
Azeem Mohomed c Sithuka Gunawardane b Sahan Viraj 0 1 0 0 0.00
Ushan Imesh c Tharushka Ashel b Naveen Kanishka 57 51 7 1 111.76
Vishwa Dhananjaya c Naveen Kanishka b Dasith Senal 0 6 0 0 0.00
Gagana Perera c Dushan Malinga b Sahan Viraj 0 8 0 0 0.00
Talisha Nanayakkara not out 1 2 0 0 50.00


Extras 9 (b 0 , lb 5 , nb 2, w 2, pen 0)
Total 186/10 (52.5 Overs, RR: 3.52)
Bowling O M R W Econ
Sahan Viraj 11.5 4 44 5 3.83
Kevin Samuel 9 1 43 1 4.78
Sithuka Gunawardhana 8 2 22 0 2.75
Yesith Kalupahana 1 0 8 0 8.00
Naveen Kanishka 14 0 32 3 2.29
Dasith Senal 9 0 32 1 3.56
Batsmen R B 4s 6s SR
Tharusha Nethsara c Navindu Dulan b Vihas Thewmika 12 28 1 0 42.86
Naveen Kanishka c Shanikiya Deshapriya b Vihas Thewmika 10 28 1 0 35.71
Tharushka Ashel c Thenuka Dewappriya b Vihas Thewmika 72 149 8 0 48.32
Yesith Kalupahana st Shanikiya Deshapriya b Ushan Imesh 51 97 2 2 52.58
Sithuka Gunawardane c Azeem Mohomed b Vihas Thewmika 6 18 0 0 33.33
Yuneth Senevirathne lbw b Vihas Thewmika 13 21 2 0 61.90
Themiya Gunarathne c Ushan Imesh b Vihas Thewmika 5 14 1 0 35.71
Dushan Malinga c Shanikiya Deshapriya b Vishwa Dhananjaya 10 56 1 0 17.86
Kevin Samuel lbw b Vihas Thewmika 21 52 3 0 40.38
Dasith Senal c Ushan Imesh b Azeem Mohomed 1 17 0 0 5.88


Extras 10 (b 3 , lb 1 , nb 6, w 0, pen 0)
Total 211/10 (78.5 Overs, RR: 2.68)
Bowling O M R W Econ
Gagana Perera 9 3 17 0 1.89
Vishwa Dhananjaya 15 3 58 1 3.87
Vihas Thewmika 31.5 6 67 7 2.13
Talisha Nanayakkara 2 0 7 0 3.50
Thanuga Palihawadana 12 3 31 0 2.58
Azeem Mohomed 3 0 8 1 2.67
Ushan Imesh 6 0 20 1 3.33


Batsmen R B 4s 6s SR
Thanuja Rajapaksha c Themiya Gunarathne b Sithuka Gunawardane 36 57 5 0 63.16
Thanuga Palihawadana c Tharusha Nethsara b Sahan Viraj 27 82 3 0 32.93
Shanikiya Deshapriya not out 53 42 9 0 126.19
Thenuka Dewappriya not out 12 40 1 0 30.00


Extras 12 (b 0 , lb 2 , nb 1, w 4, pen 5)
Total 140/2 (36.4 Overs, RR: 3.82)
Bowling O M R W Econ
Sahan Viraj 9.4 0 52 1 5.53
Kevin Samuel 1 0 8 0 8.00
Tharushka Ashel 9 0 22 0 2.44
Sithuka Gunawardhana 8 1 18 1 2.25
Dasith Senal 2 0 8 0 4.00
Naveen Kanishka 5 1 18 0 3.60
Themiya Gunarathne 2 0 7 0 3.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<