தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்திய டி20 குழாமிலிருந்து வெளியேறும் ஷிகர் தவான்
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து …..
அதன்பின் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்–ரே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இஷாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இஷாந்த் சமாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார்.
ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இஷாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்–ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக பிசிசிஐயின் முடிவு அறிவிக்கப்படும்.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு
தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் ………….
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடருக்கு இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<