அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2 – 1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
மூன்று டி 20 சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி டி 20 தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (31) அயர்லாந்தின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் நடைபெற்றது.
ஆப்கானை வீழ்த்தி ஒருநாள் தொடரை தக்கவைத்த அயர்லாந்து
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அயர்லாந்து அணி கடந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. மேலும் இன்றைய தினம் அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டெர்லிங் தனது 100 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார் என்பது விஷேட அம்சமாகும். ஆப்கானிஸ்தான் அணியில் இத்தொடர் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய ஹசரதுல்லா ஷஸாய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஹ்சானுல்லாஹ் இணைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தான் வீரர்களின் துள்ளியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 36.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. அயர்லாந்து அணி சார்பாக அதிக பட்சமாக 23 ஓட்டங்களை கேரி வில்சன் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஆப்கான் அணி சார்பாக ராஷித் கான் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஃப்டாப் அலாம் , குல்படின் நைப் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்ததியிருந்தனர்.
125 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 23.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை மூன்றாக இருந்த போது முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இஹ்சானுல்லாஹ் மற்றும் ரஹ்மத் ஷாஹ் ஆகியோர் இணைந்து 50 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரஹ்மத் ஷாஹ் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்காக இஹ்சானுல்லாஹ்வுடன் இணைந்த ஹஷ்மதுல்லாஹ் சஹிடி பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 74 ஓட்டங்களை பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
குசல் பெரேராவின் வருகையால் கண்டி அணிக்கு முதல் வெற்றி
ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ராஷித் கான் தொடரின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
அயர்லாந்து – 124 (36.1) – கேரி வில்சன் 23, ராஷித் கான் 18/3, அஃப்டாப் அலாம் 22/2, மொஹமட் நபி 26/2
ஆப்கானிஸ்தான் – 127/2 (23.5) – இஹ்சானுல்லாஹ் 57*, ஹஷ்மதுல்லாஹ் சஹிடி 34*, ரஹ்மத் ஷாஹ் 33
போட்டி முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<