ஆப்கான் சுழலில் சுருண்டது அயர்லாந்து

381

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு-க20 கிரிக்கெட் போட்டியில்  ஆப்கானிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி நேற்று (22) நடைபெற்றது.

அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பேர்டி மைதானத்தில் நேற்று

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இரு அணிகளிலும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் ஒவ்வொருவர் மாற்றப்பட்டிருந்தனர். அதாவது, ஆப்கானிஸ்தான் அணி சார்பாக உஸ்மான் கஃனிக்கு பதிலாக ஷபிகுல்லாஹ் இணைக்கப்பட்டிருந்ததோடு, அயர்லாந்து அணியில் டிரோன் கேனுக்குப் பதிலாக அனுபவ வீரர் போய்ட் ரன்கின் மாற்று வீரராக இணைக்கப்பட்டிருந்தார்.  

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர் இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஹசரதுல்லா ஷஸாய் மற்றும் அணித்தலைவர் அஸ்கர் ஆகியோர் 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்ததனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழந்து 160 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக கடந்த முதலாவது போட்டியில் 74 ஓட்டங்கள் பெற்ற ஹசரதுல்லா ஷஸாய் இப்போட்டியிலும் அதிகபட்சமாக 82 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மேலும் அணித்தலைவர் அஸ்கர் 37 ஓட்டங்களையும் நஜிபுல்லாஹ் ஸத்ரான் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் சேஸ் மூன்று விக்கெட்டுகளையும் ரன்கின் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடருக்கு ஐசிசி அங்கீகாரம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த திட்டமிட்டிருந்த, “ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்” (APL) தொடரை முன்னெடுப்பதற்கு

பின்னர், 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். அயர்லாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை மட்டுமே பெற்று 81 ஓட்டங்களால் தோல்வியடைந்து மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் இழந்தது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்பாக வில்லியம் போர்டபீல்ட் மற்றும் அணித் தலைவர்  கேரி வில்சன் ஆகியோர் முறையே 33 மற்றும் 22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஷித் கான் நான்கு விக்கெட்டுகளையும் முஜிபுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இவ்வோட்ட எண்ணிக்கை அயர்லாந்து அணியின் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் பெற்றுக் கொண்ட நான்காவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். மேலும், இவ்வெற்றி ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட ஏழாவது தொடர்ச்சியான சர்வதேச இருபதுக்கு 20 வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்.

ஆப்கானிஸ்தான் அணி 160/8 (20) – ஷஸாய் 82, அஸ்கர் 37, சேஸ் 35/3, ரன்கின் 14/2

அயர்லாந்து அணி 79 (15) – போர்டபீல்ட் 33, வில்சன் 22, ராஷித் கான் 17/4, முஜிபுர் ரஹ்மான் 17/3

போட்டி முடிவு : ஆப்கானிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றி.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க