ஆப்கானை வீழ்த்தி ஒருநாள் தொடரை தக்கவைத்த அயர்லாந்து

267

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 – 1 என்று அயர்லாந்து அணி சமநிலை செய்துள்ளது.

இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் அணி தமது 100 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தது விஷேட அம்சமாகும். அத்தோடு தமது அணி விளையாடிய முதல் 100 போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் நபி படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துடன் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கான்

3 டி-20 சர்வதேச போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு…

 இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷசாட் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததோடு ஆப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. பின்னர் ரஹ்மத் ஷாஹ் மற்றும் அணித் தலைவர் அஸ்கர் ஆப்கான் ஆகியோர் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதோடு ஏனைய விக்கெட்டுக்களுக்காக சிறந்த இணைப்பாட்டங்கள் எதையும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே ஆப்கானிஸ்தான் அணி தமது 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக நஜிபுல்லாஹ் ஜத்ரான் 42 ஓட்டங்களையும் அஸ்கர்  ஆப்கான் 39 ஓட்டங்களையும் மற்றும் ரஹ்மத் ஷாஹ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பாக டிம் முர்டாக் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு மேலும் மூன்று பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்ததியிருந்தனர்.

183 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு முதலாவது ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அயர்லாந்து அணியின் தலைவரும் ஆரம்ப    துடுப்பாட்ட வீரருமான வில்லியம் போர்டபீல்ட் ஓட்டமெதுவும் பெறாமல் முதலாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.  தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக போல் ஸ்ரேலிங் மற்றும் அன்டி பல்பரேனி ஜோடி 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பாரிய ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்படவில்லை என்றாலும் குறைந்த ஓட்ட வெற்றி இலக்கு  என்பதனால் அயர்லாந்து அணி 43.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

மெண்டிஸ், ராஜிதவின் சிறப்பாட்டத்தால் காலி அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்தி வரும்…

 அயர்லாந்து அணி சார்பாக அன்டி பல்பரேனி அதிகபட்சமாக 60 ஓட்டங்களையும் போல் ஸ்ரேலிங் 39 ஓட்டங்களையும் சிமி சிங் ஆட்டமிழக்காமல் 36  ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி     செய்தனர். ஆப்கான் அணி சார்பாக பந்து வீச்சில் ராஷித் கான் மூன்று விக்கெட்டுகளையும் மொஹமட் நபி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்ததியிருந்தனர். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (31) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 182/9 (50) – நஜிபுல்லாஹ் ஜத்ரான் 42, அஸ்கர் ஆப்கான் 39, ரஹ்மத் ஷாஹ் 32, டிம் முர்டாக் 30/4

அயர்லாந்து – 183/7 (43.5) – அன்டி பல்பரேனி 60, போல் ஸ்ரேலிங் 39, சிமி சிங் 36*, ராஷித் கான் 37/3, மொஹமட் நபி 38/2

போட்டி முடிவு அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க