சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

188
©AFP Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு மற்றும் லெண்டில் சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

மேற்கிந்திய தீவுகள்அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியதுஇந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றதுடன், முதல் போட்டியில் 4 ஓட்டங்களினால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதுடன், 2ஆவது போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

டி20 அரங்கில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்த பெல்லார்ட்

அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டி20 ………

இந்த நிலையில், தீர்மானமிக்க 3ஆவது டி20 போட்டி சென்.கிட்ஸ் மைதானத்தில் இன்று (20) நடைபெற்றதுபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுஇதில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெவின் பிரெயன் 36 ஓட்டங்களையும், அண்டி போல்பெர்னி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற அயர்லாந்து அணி 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் கிரென் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரொமாரியோ செபர்ட் மற்றும் செர்பன் ருத்தர்போர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 …………..

இதனையடுத்து, 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, எவின் லுவிஸ் மற்றும் லெண்டில் சிம்மென்ஸ் ஆகியோரது இணைப்பாட்டத்தால் 11 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.  

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றியைப் பதிவு செய்து, 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 1 – 1 என சமப்படுத்தியது.

இதன்போது லெண்ட்ல் சிமொன்ஸ் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும், எவின் லுவிஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கெண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 40 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 5 பௌண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட லென்டில் சிம்மென்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்மித்தின் சதம் வீணாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

அவுஸ்திரேலிய அணியுடனான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் …………

தொடரின் நாயகனாக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிரென் பொல்லார்ட் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து அணி – 138/10 (19.1) கெவின் பிரெயன் 36, அண்ட்ரூ பெல்பேர்னி 28, கிரென் பொல்லார்ட் 3/17, டுவைன் பிராவோ 3/19

மேற்கிந்திய தீவுகள் அணி – 140/1 (11) லெண்டில் சிம்மென்ஸ் 91, எவின் லுவிஸ் 46 

முடிவுமேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<