அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான கிரொன் பொல்லார்ட் பந்துவீச்சில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, டி20 அரங்கில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்தார்.
எனினும், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால், இன்னுமொரு போட்டி எஞ்சியிருக்க, 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என அயர்லாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
பரபரப்பான முதல் டி20யை வென்றது அயர்லாந்து
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் ஓ பிரெயன் ஆகியோரின் அதிரடி…
மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இதன் முதல் போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து, 2 ஆவது டி20 போட்டி நேற்று (18) பாஸ்ட்ரேவில் (Basseterre) நடைபெற்றது. சீரற்ற காலநிலையால் போட்டியை ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அணிக்கு 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அயர்லாந்து அணிக்கு போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் ஓ பிரெயன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கேவின் ஓ பிரெயன் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அணித் தலைவர் அண்டி போல்பெர்னி களம் இறங்கினார். முதல் போட்டியில் அரைச்சதம் கடந்த போல் ஸ்டெர்லிங் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
3 ஆவது விக்கெட்டுக்கு போல்பெர்னி, கரெத் டெலனி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தனர்.
இதில் கரெத் டெலனி 22 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். போல்பெர்னி 32 பந்தில் 36 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹெரி டெக்டர் 31 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்க்க, அயர்லாந்து அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைக் குவித்தது.
மேற்கிந்திய தரப்பில் கிரென் பொல்லார்ட் 4 விக்கெட்டுக்களையும், ஷெல்டன் கோட்ரல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் எவின் லுவிஸ் மற்றும் லென்டில் சிம்மென்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
போல் ஸ்டெர்லிங்கின் வீசிய முதலாவது ஓவரின் 5 ஆவது பந்தில் 10 ஓட்டங்களை எடுத்திருந்த சிம்மென்ஸ் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் டி20 குழாம் அறிவிப்பு
பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு…
தொடர்ந்து சிம்ரொன் ஹெட்மயர் களமிறங்கினார். எனினும் 2ஆவது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட போட்டியை மீண்டும் ஆரம்பிக்க முடியாமல் போக போட்டியைக் கைவிடுவதாக அறிவிக்கபப்ட்டது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானமிக்க மூன்றாவதும், இறுதியுமான டி20 போட்டி பாஸ்ட்ரேவில் நாளை (20) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
அயர்லாந்து – 147/9 (19) – கரெத் டெலனி 44, அண்ட்ரூ பெல்பேர்னி 36, கிரென் பொல்லார்ட் 4/25, ஷெல்டன் கொட்ரல் 2/10
மேற்கிந்திய தீவுகள் – 16/1 (2.1) – லெண்டில் சிம்மென்ஸ் 10
முடிவு – சீரற்ற காலநிலையால் போட்டி கைவிடப்பட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<