அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 100வது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை அணி தங்களுடைய 311வது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டிருந்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நூறாவது வெற்றியை பதிவுசெய்தது தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
>> மெண்டிஸின் சாதனை இரட்டைச் சதத்தோடு முதல் டெஸ்ட்டில் முன்னேறும் இலங்கை <<
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து அற்புதமாக ஆடியது.
முதல் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறிய அயர்லாந்து அணிக்காக கேர்டிஸ் கேம்பர் மற்றும் போல் ஸ்டைர்லிங் ஆகியோர் இரண்டாவது போட்டியில் சதமடித்திருந்தனர்.
கேம்பர் 111 ஓட்டங்களையும், ஸ்டைர்லிங் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன், இவர்களுடன் அன்ரு பெல்பேர்னி 95 ஓட்டங்களையும், லோர்கன் டக்கர் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள தங்களுடைய அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்து 492 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மீண்டுமொருமுறை பிரகாசித்த பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அயர்லாந்து அணியின் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையின் அழுத்தத்துக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன சதமடித்து (115 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க, இளம் வீரர் நிசான் மதுஷ்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தங்களுடைய கன்னி டெஸ்ட் இரட்டைச்சதங்களை விளாசினர்.
நிசான் மதுஷ்க தன்னுடைய கன்னி சதத்தை இரட்டைச்சதமாக மாற்றி 205 ஓட்டங்களை விளாச, காலி மைதானத்தில் மஹேல ஜயவர்தனவின் அதிக ஓட்ட எண்ணிக்கை (237) சாதனையை முறியடித்து 245 ஓட்டங்களை குசல் மெண்டிஸ் பெற்றுக்கொண்டார். இவர்களுக்கு அடுத்தப்படியாக களமிறங்கி வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ் (100*) தன்னுடைய வேகமான டெஸ்ட் சதத்தை 114 பந்துகளில் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணி வீரர்கள் பெற்றுக்கொண்ட இரட்டைச்சதங்கள் மற்றும் குசல் மெண்டிஸின் சிக்ஸர்கள் சாதனை (11 சிக்ஸர்கள்), காலி மைதானத்தில் அதிகூடிய ஓட்டங்கள் என பல சாதனைகளை துடுப்பாட்டத்தின் மூலம் பதிவுசெய்த இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 704 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டத்தை இடைநிறுத்தியது.
>> காலி மைதானத்தில் சாதனைகளை குவித்த இலங்கை அணி <<
நான்காவது நாள் இறுதிநேரத்தில் 212 ஓட்டங்கள் பின்னடைவில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி ஆட்டநேர நிறைவின்போது 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்தது.
போட்டியில் வெற்றிபெறுவதற்கு ஐந்தாவது நாளான இன்று (28) இலங்கை அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவையாக இருந்த நிலையில், அயர்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் சவாலை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். குறிப்பாக அணித்தலைவர் பெல்பேர்னீ மற்றும் ஹெரி டெக்டர் ஆகியோர் இலங்கைக்கு அதீத அழுத்தம் கொடுத்தனர்.
எனினும் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த தேநீர் இடைவேளைக்கு சற்றுமுன்னர் இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.
அயர்லாந்து அணிக்காக இறுதிவரை போராடிய ஹெரி டெக்டர் 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பெல்பேர்னீ 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், அசித பெர்னாண்டோ வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் கொடுக்காத இந்த ஆடுகளத்தில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அற்புதம் காட்டினார்.
>> 71 ஆண்டுகால சாதனையை முறியடித்த பிரபாத் ஜயசூரிய! <<
அதேநேரம் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை (7 போட்டிகள்) கைப்பற்றிய சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.
எனவே காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றிக்கொண்டது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
James McCollum | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 10 | 28 | 2 | 0 | 35.71 |
Peter Moor | lbw b Asitha Fernando | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Andy Balbirnie | c Dhananjaya de Silva b Ramesh Mendis | 95 | 163 | 14 | 0 | 58.28 |
Harry Tector | c Dinesh Chandimal b Prabath Jayasuriya | 18 | 44 | 3 | 0 | 40.91 |
Paul Stirling | c Dhananjaya de Silva b Asitha Fernando | 103 | 181 | 9 | 4 | 56.91 |
Lorcan Tucker | b Vishwa Fernando | 80 | 106 | 10 | 0 | 75.47 |
Curtis Campher | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 111 | 229 | 15 | 2 | 48.47 |
Andy McBrine | c & b | 35 | 59 | 3 | 1 | 59.32 |
Graham Hume | lbw b Prabath Jayasuriya | 6 | 23 | 1 | 0 | 26.09 |
Matthew Humphreys | c & b | 7 | 23 | 0 | 0 | 30.43 |
Ben White | not out | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 9 , lb 11 , nb 1, w 1, pen 0) |
Total | 492/10 (145.3 Overs, RR: 3.38) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 24 | 1 | 92 | 2 | 3.83 | |
Asitha Fernando | 22 | 4 | 78 | 2 | 3.55 | |
Prabath Jayasuriya | 58.3 | 13 | 174 | 5 | 2.98 | |
Ramesh Mendis | 27 | 4 | 108 | 1 | 4.00 | |
Dhananjaya de Silva | 14 | 5 | 20 | 0 | 1.43 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | lbw b Andy McBrine | 205 | 339 | 22 | 1 | 60.47 |
Dimuth Karunaratne | c Matthew Humphreys b Curtis Campher | 115 | 133 | 15 | 0 | 86.47 |
Kusal Mendis | c Matthew Humphreys b Graham Hume | 245 | 291 | 18 | 11 | 84.19 |
Angelo Mathews | not out | 100 | 114 | 6 | 4 | 87.72 |
Dinesh Chandimal | not out | 13 | 14 | 2 | 0 | 92.86 |
Dhananjaya de Silva | not out | 12 | 17 | 2 | 0 | 70.59 |
Extras | 14 (b 2 , lb 8 , nb 2, w 2, pen 0) |
Total | 704/3 (151 Overs, RR: 4.66) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Graham Hume | 22 | 3 | 87 | 1 | 3.95 | |
Andy McBrine | 57 | 8 | 191 | 1 | 3.35 | |
Curtis Campher | 20 | 1 | 101 | 1 | 5.05 | |
Matthew Humphreys | 10 | 0 | 67 | 0 | 6.70 | |
Ben White | 34 | 1 | 203 | 0 | 5.97 | |
Harry Tector | 8 | 0 | 45 | 0 | 5.62 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
James McCollum | b Ramesh Mendis | 10 | 16 | 2 | 0 | 62.50 |
Peter Moor | c Angelo Mathews b Prabath Jayasuriya | 19 | 39 | 1 | 2 | 48.72 |
Andy Balbirnie | c Angelo Mathews b Ramesh Mendis | 46 | 101 | 5 | 0 | 45.54 |
Harry Tector | b Asitha Fernando | 85 | 189 | 8 | 3 | 44.97 |
Paul Stirling | c Kusal Mendis b Prabath Jayasuriya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Lorcan Tucker | b Asitha Fernando | 13 | 23 | 2 | 0 | 56.52 |
Curtis Campher | c Kusal Mendis b Ramesh Mendis | 12 | 33 | 2 | 0 | 36.36 |
Andy McBrine | c Dhananjaya de Silva b Ramesh Mendis | 10 | 19 | 2 | 0 | 52.63 |
Graham Hume | c Sadeera Samarawickrama b Ramesh Mendis | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Matthew Humphreys | not out | 4 | 31 | 1 | 0 | 12.90 |
Ben White | b Asitha Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 202/10 (77.3 Overs, RR: 2.61) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Prabath Jayasuriya | 32 | 9 | 88 | 2 | 2.75 | |
Ramesh Mendis | 27 | 6 | 64 | 5 | 2.37 | |
Asitha Fernando | 11.3 | 3 | 30 | 3 | 2.65 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 3 | 0 | 3.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<