Home Tamil கேம்பர், ஸ்டேர்லிங்கின் துடுப்பாட்டத்தோடு முதல் இன்னிங்ஸில் வலுப்பெற்ற அயர்லாந்து

கேம்பர், ஸ்டேர்லிங்கின் துடுப்பாட்டத்தோடு முதல் இன்னிங்ஸில் வலுப்பெற்ற அயர்லாந்து

271

அயர்லாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவில் போல் ஸ்டேர்லிங், கேர்டிஸ் கேம்பர் ஆகியோரின் அபார சதங்களோடு அயர்லாந்து கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் வலுப் பெற்றிருக்கின்றது.

>> பொறுப்பான முறையில் துடுப்பாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி 

காலியில் நடைபெற்று வரும் இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று (24) முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த அயர்லாந்து 319 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த லோர்கன் டக்கர் 78 ஓட்டங்களையும், கேர்டிஸ் கேம்பர் 27 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த அயர்லாந்து கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் களத்தில் இருந்த லோர்கன் டக்கரின் விக்கெட்டினை விஷ்வ பெர்னாண்டோவின் வேகத்தில் பறிகொடுத்தது. இன்றைய நாளில் 02 ஓட்டங்கள் மாத்திரமே பெற்ற லோர்கன் டக்கர் 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.

இதன் பின்னர் போட்டியின் முதல் நாளில் தசைப் பிரச்சினை காரணமாக மைதானத்தினை விட்டு 74 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்த போல் ஸ்டேர்லிங் களம் வந்ததோடு டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற கன்னி சதத்தோடு அயர்லாந்து தரப்பினை பலப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போல் ஸ்டேர்லிங் 04 சிக்ஸர்கள் மற்றும் 09 பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போல் ஸ்டேர்லிங்கின் பின்னர் அணியின் 7ஆவது விக்கெட்டுக்காக கேர்டிஸ் கேம்பர், என்டி மெக்பிரைன் உடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கியதோடு குறித்த இணைப்பாட்டத்திற்குள் கேர்டிஸ் கேம்பர் தன்னுடைய கன்னி டெஸ்ட் சதத்தினையும் பூர்த்தி செய்தார்.

>> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய குழாம் அறிவிப்பு

தொடர்ந்து 85 ஓட்டங்கள் வரை நீடித்த அயர்லாந்து அணியின் 7ஆவது விக்கெட் இணைப்பாட்டம் என்டி மெக்பிரைனின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. விஷ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் பிடியெடுப்பு வழங்கி ஆட்டமிழந்த என்டி மெக்பிரைன் 35 ஓட்டங்கள் பெற்றார்.

என்டி மெக்பிரைனை அடுத்து சதம் விளாசியிருந்த கேம்பரின் விக்கெட்டும் பறிபோக அயர்லாந்து கிரிக்கெட் அணி போட்டியின் இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக தமது அனைத்து விக்கெட்டுக்களையும் 145.3 ஓவர்களில் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்கள் எடுத்தது. அத்துடன் இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அயர்லாந்து பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் மாறியது.

அயர்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் கேர்டிஸ் கேம்பர் 229 பந்துகளை முகம் கொடுத்து 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார்.

>> IPL பிளே-ஓஃப் சுற்றுக்கான மைதானங்கள் அறிவிப்பு

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்படும் போது தமது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தற்போது அயர்லாந்தை விட 411 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காது நிற்கும் நிஷான் மதுஷ்க 41 ஓட்டங்களுடனும், திமுத் கருணாரட்ன 39 ஓட்டங்களுடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
704/3 (151)

Ireland
492/10 (145.3) & 202/10 (77.3)

Batsmen R B 4s 6s SR
James McCollum c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 10 28 2 0 35.71
Peter Moor lbw b Asitha Fernando  5 7 1 0 71.43
Andy Balbirnie c Dhananjaya de Silva b Ramesh Mendis 95 163 14 0 58.28
Harry Tector c Dinesh Chandimal b Prabath Jayasuriya 18 44 3 0 40.91
Paul Stirling c Dhananjaya de Silva b Asitha Fernando  103 181 9 4 56.91
Lorcan Tucker b Vishwa Fernando 80 106 10 0 75.47
Curtis Campher c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 111 229 15 2 48.47
Andy McBrine c & b 35 59 3 1 59.32
Graham Hume lbw b Prabath Jayasuriya 6 23 1 0 26.09
Matthew Humphreys c & b 7 23 0 0 30.43
Ben White not out 0 11 0 0 0.00


Extras 22 (b 9 , lb 11 , nb 1, w 1, pen 0)
Total 492/10 (145.3 Overs, RR: 3.38)
Bowling O M R W Econ
Vishwa Fernando 24 1 92 2 3.83
Asitha Fernando  22 4 78 2 3.55
Prabath Jayasuriya 58.3 13 174 5 2.98
Ramesh Mendis 27 4 108 1 4.00
Dhananjaya de Silva 14 5 20 0 1.43
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka lbw b Andy McBrine 205 339 22 1 60.47
Dimuth Karunaratne c Matthew Humphreys b Curtis Campher 115 133 15 0 86.47
Kusal Mendis c Matthew Humphreys b Graham Hume 245 291 18 11 84.19
Angelo Mathews not out 100 114 6 4 87.72
Dinesh Chandimal not out 13 14 2 0 92.86
Dhananjaya de Silva not out 12 17 2 0 70.59


Extras 14 (b 2 , lb 8 , nb 2, w 2, pen 0)
Total 704/3 (151 Overs, RR: 4.66)
Bowling O M R W Econ
Graham Hume 22 3 87 1 3.95
Andy McBrine 57 8 191 1 3.35
Curtis Campher 20 1 101 1 5.05
Matthew Humphreys 10 0 67 0 6.70
Ben White 34 1 203 0 5.97
Harry Tector 8 0 45 0 5.62


Batsmen R B 4s 6s SR
James McCollum b Ramesh Mendis 10 16 2 0 62.50
Peter Moor c Angelo Mathews b Prabath Jayasuriya 19 39 1 2 48.72
Andy Balbirnie c Angelo Mathews b Ramesh Mendis 46 101 5 0 45.54
Harry Tector b Asitha Fernando  85 189 8 3 44.97
Paul Stirling c Kusal Mendis b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Lorcan Tucker b Asitha Fernando  13 23 2 0 56.52
Curtis Campher c Kusal Mendis b Ramesh Mendis 12 33 2 0 36.36
Andy McBrine c Dhananjaya de Silva b Ramesh Mendis 10 19 2 0 52.63
Graham Hume c Sadeera Samarawickrama b Ramesh Mendis 0 8 0 0 0.00
Matthew Humphreys not out 4 31 1 0 12.90
Ben White b Asitha Fernando  0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 202/10 (77.3 Overs, RR: 2.61)
Bowling O M R W Econ
Vishwa Fernando 6 1 15 0 2.50
Prabath Jayasuriya 32 9 88 2 2.75
Ramesh Mendis 27 6 64 5 2.37
Asitha Fernando  11.3 3 30 3 2.65
Dhananjaya de Silva 1 0 3 0 3.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<