Home Tamil பொறுப்பான முறையில் துடுப்பாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி

பொறுப்பான முறையில் துடுப்பாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி

513
Ireland tour of Sri Lanka 2023

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் அயர்லாந்து கிரிக்கெட் அணியானது அதன் தலைவர் அன்ட்ரூ பல்பைர்னி, லோர்கன் டக்கர் மற்றும் போல் ஸ்டேர்லிங் ஆகியோரது துடுப்பாட்டங்களோடு வலுப் பெற்றிருக்கின்றது.

இன்று (24) காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை – அயர்லாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ பல்பைர்னி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்த இலங்கை இப்போட்டியில் மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்க, அயர்லாந்து மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

அதன்படி மாற்றங்களில் ஒருவராக அயர்லாந்து அணியில் இணைந்த மெதிவ் ஹம்ப்ரே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற, அனுபவ வீரரான போல் ஸ்டேர்லிங்கும் அயர்லாந்து டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

>> இரண்டாவது டெஸ்டில் மாற்றங்கள் மேற்கொள்ளுமா இலங்கை?

இலங்கை குழாம்

திமுத் கருணாரட்ன (தலைவர்), நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, பிரபாத் ஜயசூரிய, ரமேஸ் மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ

அயர்லாந்து குழாம்

ஜேம்ஸ் மெக்கொல்லம், போல் ஸ்டெர்லிங், அன்ட்ரூ பல்பைர்னி (தலைவர்), ஹர்ரி டெக்டர், கேர்டிஸ் கேம்பர், பீடர் மூர், லோர்கன் டக்கர், கிரஹம் ஹூமே, அன்டி மெக்பிரைன், மெதிவ் ஹம்ப்ரே, பென்ஜமின் வைட்

நாணய சுழற்சிக்கு அமைய பின்னர் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த அயர்லாந்து வீரர்களுக்கு அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் நெருக்கடி உருவாக்கினார். இதனால் அணியின் ஆரம்ப வீரர்களான பீடர் மூரின் விக்கெட் அவர் 05 ஓட்டங்கள் பெற்ற வேளையிலும், ஏனைய ஆரம்ப வீரரான ஜேம்ஸ் மெக்கொல்லமின் விக்கெட் அவர் 10 ஓட்டங்கள் பெற்ற நிலையிலும் பறிபோனது.

இதன் பின்னர் அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஹர்ரி டெக்டர் 18 ஓட்டங்களுடன் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் வெளியேறிய நிலையில் அயர்லாந்து 89 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் அன்ட்ரூ பல்பைர்னி மற்றும் போல் ஸ்டேர்லிங் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கத் தொடங்கியதோடு இந்த இணைப்பாட்டம் முதல் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் போல் ஸ்டேர்லிங் மைதானத்தினை விட்டு வெளியேறும் வரை நீடித்தது.

தசைப் பிரச்சினை காரணமாக மைதானத்தினை விட்டு வெளியேறிய போல் ஸ்டேர்லிங் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு அவர் அயர்லாந்தின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்களையும் அணித் தலைவர் பல்பைர்னி உடன் இணைந்து பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தன்னுடைய 3ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு சதத்தைப் பெற நெருங்கியிருந்த அணித்தலைவர் அன்ட்ரூ பல்பைர்னி தன்னுடைய விக்கெட்டினை ரமேஷ் மெண்டிஸிடம் பறிகொடுத்தார். அன்ட்ரூ பல்பைர்னி ஆட்டமிழக்கும் போது 14 பௌண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> இரண்டாவது டெஸ்டில் மாற்றங்கள் மேற்கொள்ளுமா இலங்கை?

தொடர்ந்து களத்தில் இருந்த துடுப்பாட்டவீரரான லோர்கன் டக்கர் அரைச்சதம் விளாச மேலும் வலுப் பெற்ற அயர்லாந்து கிரிக்கெட் அணி போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் முதல் இன்னிங்ஸிற்காக 319 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் லோர்கன் டக்கர் 78 ஓட்டங்களுடனும், கேர்டிஸ் கேம்பர் 27 ஓட்டங்களுடனும் அயர்லாந்திற்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 02 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
704/3 (151)

Ireland
492/10 (145.3) & 202/10 (77.3)

Batsmen R B 4s 6s SR
James McCollum c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 10 28 2 0 35.71
Peter Moor lbw b Asitha Fernando  5 7 1 0 71.43
Andy Balbirnie c Dhananjaya de Silva b Ramesh Mendis 95 163 14 0 58.28
Harry Tector c Dinesh Chandimal b Prabath Jayasuriya 18 44 3 0 40.91
Paul Stirling c Dhananjaya de Silva b Asitha Fernando  103 181 9 4 56.91
Lorcan Tucker b Vishwa Fernando 80 106 10 0 75.47
Curtis Campher c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 111 229 15 2 48.47
Andy McBrine c & b 35 59 3 1 59.32
Graham Hume lbw b Prabath Jayasuriya 6 23 1 0 26.09
Matthew Humphreys c & b 7 23 0 0 30.43
Ben White not out 0 11 0 0 0.00


Extras 22 (b 9 , lb 11 , nb 1, w 1, pen 0)
Total 492/10 (145.3 Overs, RR: 3.38)
Bowling O M R W Econ
Vishwa Fernando 24 1 92 2 3.83
Asitha Fernando  22 4 78 2 3.55
Prabath Jayasuriya 58.3 13 174 5 2.98
Ramesh Mendis 27 4 108 1 4.00
Dhananjaya de Silva 14 5 20 0 1.43
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka lbw b Andy McBrine 205 339 22 1 60.47
Dimuth Karunaratne c Matthew Humphreys b Curtis Campher 115 133 15 0 86.47
Kusal Mendis c Matthew Humphreys b Graham Hume 245 291 18 11 84.19
Angelo Mathews not out 100 114 6 4 87.72
Dinesh Chandimal not out 13 14 2 0 92.86
Dhananjaya de Silva not out 12 17 2 0 70.59


Extras 14 (b 2 , lb 8 , nb 2, w 2, pen 0)
Total 704/3 (151 Overs, RR: 4.66)
Bowling O M R W Econ
Graham Hume 22 3 87 1 3.95
Andy McBrine 57 8 191 1 3.35
Curtis Campher 20 1 101 1 5.05
Matthew Humphreys 10 0 67 0 6.70
Ben White 34 1 203 0 5.97
Harry Tector 8 0 45 0 5.62


Batsmen R B 4s 6s SR
James McCollum b Ramesh Mendis 10 16 2 0 62.50
Peter Moor c Angelo Mathews b Prabath Jayasuriya 19 39 1 2 48.72
Andy Balbirnie c Angelo Mathews b Ramesh Mendis 46 101 5 0 45.54
Harry Tector b Asitha Fernando  85 189 8 3 44.97
Paul Stirling c Kusal Mendis b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Lorcan Tucker b Asitha Fernando  13 23 2 0 56.52
Curtis Campher c Kusal Mendis b Ramesh Mendis 12 33 2 0 36.36
Andy McBrine c Dhananjaya de Silva b Ramesh Mendis 10 19 2 0 52.63
Graham Hume c Sadeera Samarawickrama b Ramesh Mendis 0 8 0 0 0.00
Matthew Humphreys not out 4 31 1 0 12.90
Ben White b Asitha Fernando  0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 202/10 (77.3 Overs, RR: 2.61)
Bowling O M R W Econ
Vishwa Fernando 6 1 15 0 2.50
Prabath Jayasuriya 32 9 88 2 2.75
Ramesh Mendis 27 6 64 5 2.37
Asitha Fernando  11.3 3 30 3 2.65
Dhananjaya de Silva 1 0 3 0 3.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<