சுற்றுலா இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
போட்டியின் மூன்றாம் நாளிலே வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணியானது இந்த வெற்றியுடன் இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. அத்துடன் இப்போட்டியில் கிடைத்த வெற்றியானது இன்னிங்ஸ் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும் மாறியிருக்கின்றது.
மாலிங்கவிற்கு நன்றி தெரிவித்த குட்டி மாலிங்க
காலியில் நடைபெற்று வந்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (17) நிறைவுக்கு வந்த போது, இலங்கையின் முதல் இன்னிங்ஸை (591) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அயர்லாந்து வீரர்கள் 117 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். களத்தில் ஆட்டமிழக்காது காணப்பட்ட லோர்கன் டக்கர் 21 ஓட்டங்களுடனும் என்டி மெக்பிரைன் 5 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கையை விட 474 ஓட்டங்கள் பின்தங்கியவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த அயர்லாந்து அணி போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தமது எஞ்சிய விக்கெட்டுக்கள் அனைத்தினையும் பறிகொடுத்து 143 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
அயர்லாந்து துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 73 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இலங்கை பந்துவீச்சில் 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்ய, விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இவர்களுடன் ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார்.
பின்னர் 448 ஓட்டங்கள் பின்தங்கியவாறு காணப்பட்ட அயர்லாந்து இரண்டாம் இன்னிங்ஸை பலோவ் ஒன் முறையில் ஆரம்பித்தது. இரண்டாம் இன்னிங்ஸிலும் தொடக்கத்தில் இருந்து தடுமாறி இறுதியில் மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து (இரண்டாம் இன்னிங்ஸில்) 168 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
மிகவும் பலமான நிலைக்குச் சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி
அயர்லாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் ஹர்ரி டெக்டர் 42 ஓட்டங்கள் பெற்று தன்னுடைய தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, ஜோர்ஜ் டொக்ரல் 32 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் இம்முறை 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ரமேஷ் மெண்டிஸ் இந்த டெஸ்ட் போட்டி மூலம், மொத்தமாக 50 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்காக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் (11) 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார். இவரோடு பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவாகினார்.
போட்டியின் ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Lorcan Tucker b Curtis Campher | 29 | 48 | 4 | 0 | 60.42 |
Dimuth Karunaratne | c Lorcan Tucker b Mark Adair | 179 | 235 | 15 | 0 | 76.17 |
Kusal Mendis | lbw b George Dockrell | 140 | 193 | 18 | 1 | 72.54 |
Angelo Mathews | c Lorcan Tucker b Ben White | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dinesh Chandimal | not out | 102 | 155 | 12 | 0 | 65.81 |
Prabath Jayasuriya | lbw b Curtis Campher | 16 | 23 | 3 | 0 | 69.57 |
Dhananjaya de Silva | lbw b Andy McBrine | 12 | 16 | 3 | 0 | 75.00 |
Sadeera Samarawickrama | not out | 104 | 114 | 11 | 0 | 91.23 |
Extras | 9 (b 4 , lb 3 , nb 1, w 1, pen 0) |
Total | 591/6 (131 Overs, RR: 4.51) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mark Adair | 24.3 | 3 | 95 | 1 | 3.91 | |
Curtis Campher | 21 | 2 | 84 | 2 | 4.00 | |
Andy McBrine | 40 | 2 | 162 | 1 | 4.05 | |
Ben White | 22 | 0 | 119 | 1 | 5.41 | |
George Dockrell | 21.3 | 0 | 112 | 1 | 5.26 | |
Harry Tector | 2 | 0 | 12 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
James McCollum | b Prabath Jayasuriya | 35 | 85 | 5 | 0 | 41.18 |
Murray Commins | b Vishwa Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Andy Balbirnie | c Nishan Madushka b Vishwa Fernando | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Harry Tector | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 34 | 59 | 0 | 1 | 57.63 |
Curtis Campher | c Ramesh Mendis b Prabath Jayasuriya | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Peter Moor | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 14 | 29 | 2 | 0 | 48.28 |
Lorcan Tucker | lbw b Prabath Jayasuriya | 45 | 73 | 7 | 0 | 61.64 |
George Dockrell | lbw b Prabath Jayasuriya | 2 | 24 | 0 | 0 | 8.33 |
Andy McBrine | lbw b Ramesh Mendis | 7 | 35 | 1 | 0 | 20.00 |
Mark Adair | st Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Ben White | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 2, w 0, pen 0) |
Total | 143/10 (52.3 Overs, RR: 2.72) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 5 | 2 | 9 | 0 | 1.80 | |
Vishwa Fernando | 9 | 2 | 38 | 2 | 4.22 | |
Prabath Jayasuriya | 23 | 10 | 52 | 7 | 2.26 | |
Ramesh Mendis | 14.3 | 3 | 40 | 1 | 2.80 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 4 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
James McCollum | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 8 | 28 | 0 | 0 | 28.57 |
Murray Commins | c Ramesh Mendis b Vishwa Fernando | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Andy Balbirnie | c Dhananjaya de Silva b Vishwa Fernando | 6 | 16 | 1 | 0 | 37.50 |
Harry Tector | run out (Sadeera Samarawickrama) | 42 | 95 | 4 | 0 | 44.21 |
Lorcan Tucker | lbw b Prabath Jayasuriya | 6 | 10 | 1 | 0 | 60.00 |
Peter Moor | c Nishan Madushka b Ramesh Mendis | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Curtis Campher | c Nishan Madushka b Ramesh Mendis | 30 | 73 | 5 | 0 | 41.10 |
George Dockrell | lbw b Ramesh Mendis | 32 | 54 | 6 | 0 | 59.26 |
Andy McBrine | c Kusal Mendis b Ramesh Mendis | 10 | 11 | 2 | 0 | 90.91 |
Mark Adair | not out | 23 | 29 | 3 | 0 | 79.31 |
Ben White | lbw b Prabath Jayasuriya | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 10 (b 5 , lb 3 , nb 1, w 1, pen 0) |
Total | 168/10 (54.1 Overs, RR: 3.1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Prabath Jayasuriya | 24.1 | 6 | 56 | 3 | 2.32 | |
Vishwa Fernando | 4 | 2 | 3 | 2 | 0.75 | |
Ramesh Mendis | 20 | 1 | 76 | 4 | 3.80 | |
Asitha Fernando | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Dhananjaya de Silva | 3 | 0 | 10 | 0 | 3.33 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<