ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான மூவகையான கிரிக்கெட் தொடர்களுக்குமான அயர்லாந்து அணியின் 15 பேர் கொண்ட குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரில் அயர்லாந்து A அணியை வைட்வொஷ் செய்த இலங்கை A
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று..
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த வருடம் (2018) டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தற்போது இருதரப்பு தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் 3 டி20 சர்வதேச போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களும் நடைபெறவுள்ளது. குறித்த தொடரானது அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகும். இந்த தொடரானது இந்தியாவிலேயே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தொடரை எதிர்கொள்வதற்கான அயர்லாந்து அணியின் அனைத்து விதமான தொடர்களுக்குமான குழாம் நேற்று (28) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டிருந்த குறித்த தொடரானது ஏப்ரல் மாதமளவிலேயே நாடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்தியாவில் அக்காலப்பகுதியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறவுள்ள காரணத்தினாலேயே குறித்த தொடரானது அடுத்த மாதத்திற்கு முற்கூட்டி நடாத்தப்படுகின்றது.
டி20 குழாம்
ஆப்கானிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அயர்லாந்து அணியின் 15 பேர் கொண்ட குழாம் அயர்லாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவரான அண்ட்ரூ வைட்டினால் வெளியிடப்பட்டுள்ளது.
டி20 போட்டிகளின் தலைவராக செயற்படும் கெரி வில்சன் நோய் ஏற்பட்டதன் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில் டி20 அணியின் தலைவராக 28 வயதுடைய துடுப்பாட்ட சகலதுறை வீரரான போல் ஸ்டேர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார். போல் ஸ்டேர்லிங் அணியை வழிநடத்தும் தலைமைத்துவத்தை ஏற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
>> விறுவிறுப்பான போட்டியில் வெற்றியை தவறவிட்ட யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி
2009 ஆம் ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெற்ற இவர் 52 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்களுடன் 1181 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும் சகலதுறையின் பங்கான பந்துவீச்சில் 15 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். இவர் தற்சயம் பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போல் ஸ்டேர்லிங் தலைமையிலான அணியில் அண்ட்ரூ பல்ப்ரைன், பீட்டர் சேஸ், கிரோஜ் டொக்ரெல், ஷேன் கெட்கேட், ஜொஸ் லிட்டில், அண்ட்ரூ மெக்பிரைன், கெவின் ஓ பிரைன், ஸ்டுவர்ட் பொய்ன்டர், பெய்ட் ரேங்கின், ஸிமி சிங், ஹெரி டெக்டொர், ஸ்டுவர்ட் தொம்ப்சன், லொர்கன் டுகர், ஜேம்ஸ் சனொன்
சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய இன்றைய (29) டி20 தரப்படுத்தலின்படி ஆப்கானிஸ்தான் அணி 92 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும், அயர்லாந்து அணி 34 புள்ளிகளுடன் தரவரிசையில் இறுதி இடமான 17 ஆவது இடத்திலும் உள்ளது.
ஒருநாள் குழாம்
ஆப்கானிஸ்தான் அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அயர்லாந்து அணியின் 15 பேர் கொண்ட குழாம் அயர்லாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவரான அண்ட்ரூ வைட்டினால் வெளியிடப்பட்டுள்ளது.
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் வழமையான ஒருநாள் அணியின் தலைவர் வில்லியம் போட்டர்பீல்ட் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடருக்கும் அணித்தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
வில்லியம் போட்டர்பீல்ட் தலைமையிலான அணியில் அண்ட்ரூ பல்ப்ரைன், ஜேம்ஸ் கெமரூன் டௌவ், பீட்டர் சேஸ், கிரோஜ் டொக்ரெல், அண்ட்ரூ மெக்பிரைன், பெரி மெக்கார்த்தி, ஜேம்ஸ் மெக்கலம், டிம் முர்டெக், கெவின் ஓ பிரைன், ஸ்டுவர்ட் பொய்ன்டர், பெய்ட் ரேங்கின், ஸிமி சிங், போல் ஸ்டேர்லிங், லொர்கன் டுகர்,
சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய இன்றைய (29) ஒருநாள் அணிகளின் தரப்படுத்தலின்படி ஆப்கானிஸ்தான் அணி 67 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திலும், அயர்லாந்து அணி 39 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்திலும் உள்ளது.
டெஸ்ட் குழாம்
2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட இரு நாடுகளும் நேருக்கு நேர் முதன் முறையாக எதிர்கொள்ளவுள்ளன. இரு அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டு ஒரு போட்டி வீதம் விளையாடியுள்ளன.
ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடனும், அயர்லாந்து அணி தரவரிசையில் ஏழாமிடத்தில் இருக்கும் பாக்கிஸ்தான் அணியுடனும் விளையாடியிருந்தன. குறித்த இரண்டு போட்டிகளிலும் இரு புதிய அணிகளும் தோல்வியடைந்திருந்தன.
>> அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 2020 மகளிர் T20 உலகக் கிண்ணம்
இந்நிலையில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தலில் இடம்பிடிக்கும் நோக்குடன் இரு அணிகளும் இந்தியாவில் வைத்து பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.
இதற்கான அயர்வாந்து அணியின் 15 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் அயர்லாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவரான அண்ட்ரூ வைட்டினால் வெளியிடப்பட்டுள்ளது.
வில்லியம் போட்டர்பீல்ட் தலைமையிலான அணியில் அண்ட்ரூ பல்ப்ரைன், ஜேம்ஸ் கெமரூன் டௌவ், கிரோஜ் டொக்ரெல், அண்ட்ரூ மெக்பிரைன், பெரி மெக்கார்த்தி, ஜேம்ஸ் மெக்கலம், டிம் முர்டெக், கெவின் ஓ பிரைன், ஸ்டுவர்ட் பொய்ன்டர், பெய்ட் ரேங்கின், ஸிமி சிங், போல் ஸ்டேர்லிங், ஸ்டுவர்ட் தொம்ப்சொன், லொர்கன் டுகர்
போட்டி அட்டவணை
- 21 பெப்ரவரி – முதலாவது டி20 சர்வதேச போட்டி
- 23 பெப்ரவரி – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி
- 24 பெப்ரவரி – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி
- 28 பெப்ரவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி
- 02 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி
- 05 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி
- 08 மார்ச் – நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி
- 10 மார்ச் – ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி
- 15 – 19 மார்ச் – ஒரு போட்டி கொண்ட டெஸ்ட்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<