ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு

182
Image Courtesy - Ireland Twitter

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. 

அயர்லாந்து கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விருதரப்பு தொடரில் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன. குறித்த தொடர் அடுத்த மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்விரு தொடர்களுக்குமான அயர்லாந்து அணியின் குழாம் இன்று (26) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் அண்ட்ரூ வைட்டினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இறுதி டி20 யில் சுப்பர் ஓவரில் வெற்றியை தனதாக்கிய ஜிம்பாப்வே

இரு அணிகளின் கைகளுக்கும் மாறி மாறி சென்ற போட்டியில் இறுதியில்…..

ஒருநாள் சர்வதேச குழாம் 

வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேச குழாமின் அடிப்படையில் அணியின் தலைவராக தொடர்ந்தும் வில்லியம் போட்டர்பீல்ட் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். இறுதியாக அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடிய ஒருநாள் தொடருக்கான குழாமிலிருந்து இரண்டு மாற்றங்களை ஜிம்பாப்வே தொடருக்காக செய்துள்ளது. 

சுழல் பந்துவீச்சாளரான ஜோர்ஜ் டொக்ரெல் மற்றும் வேகப்பந்துவீச்சாளரான பெரி மெக்கார்தி ஆகியோர் குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 6 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரரான ஷேன் கெட்கேட் மற்றும் வேகப்பந்துவீச்சாளரன த்ரோன் கேன் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

வெளியிடப்பட்டுள்ள 14 பேர் அடங்கிய ஒருநாள் குழாமில் நான்கு துடுப்பாட்ட வீரர்கள், நான்கு சகலதுறை வீரர்கள், இரண்டு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் நான்கு பந்துவீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

14 பேர் அடங்கிய ஒருநாள் குழாம்

வில்லியம் போட்டர்பில்ட் (அணித்தலைவர்), மார்க் அடியர், அண்ட்ரூ பல்பேனி, ஷேன் கெட்கேட், த்ரோன் கேன், அண்ட்ரூ மெக்பிரைன், ஜேம்ஸ் மெக்கலம், டிம் முர்டக், கெவின் ஓ பிரைன், பொயட் ரேன்கின், சிமி சிங், போல் ஸ்டேலிங், லோர்கன் டுக்கர், கெரி வில்சன் (விக்கெட் காப்பாளர்)

உலகக் கிண்ணத்தில் ஆர்ச்சர், வோர்னர், ஸ்டார்க் படைத்த சாதனை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் லோர்ட்ஸில் நேற்று…..

டி20 சர்வதேச குழாம்

வெளியிடப்பட்ட ஒருநாள் குழாமிலிருந்து சில மாற்றங்கள் டி20 குழாமில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருநாள் அணியின் தலைவர் வில்லியம் போட்டர்பீல்ட் டி20 போட்டிகளில் இடம்பெறாததன் காரணமாக அணியின் தலைமைத்துவம் விக்கெட் காப்பாளர் கெரி வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 22 வயதுடைய சகலதுறை வீரரான க்ரெத் டெலானி முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் குழாமில் தவறவிடப்பட்ட அயர்லாந்து அணியின் முக்கிய அனுபவ வீரரான சுழல் பந்துவீச்சாளர் ஜோர்ஜ் டொக்ரெல் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார்.

19 வயது இளம் வீரர் ஜொஸ் லிட்டில், கிரேக் யங் மற்றும் கிரேக் தொம்ப்ஸன் ஆகியோர் தனியாக டி20 குழாமில் இடம்பெற்றுள்ளனர். இரண்டு துடுப்பாட்ட வீரர்கள், நான்கு சகலதுறை வீரர்கள், இரண்டு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் ஆறு பந்துவீச்சாளர்கள் உள்ளடங்களாக 14 பேர் டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளர்.  

14 பேர் அடங்கிய டி20 சர்வதேச குழாம்

கெரி வில்சன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), மார்க் அடியர், அண்ட்ரூ பல்பேனி, க்ரெத் டெலானி, ஜோர்ஜ் டொக்ரெல், ஷேன் கெட்கேட், த்ரோன் கேன், ஜொஸ் லிட்டில், கெவின் ஓ பிரைன், பொயட் ரேன்கின், போல் ஸ்டேலிங், கிரேக் தொம்ப்ஸன், லோர்கன் டுக்கர், கிரேக் யங்  

இருதரப்பு தொடர் அட்டவணை

1 ஜூலை – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ப்ரேடி

4 ஜூலை – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஸ்டோர்மொன்ட்

7 ஜூலை – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஸ்டோர்மொன்ட்

10 ஜூலை – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஸ்டோர்மொன்ட்

12 ஜூலை – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ப்ரேடி

14 ஜூலை – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ப்ரேடி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<