அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?

390
Ireland Cricket
Getty image

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது.

விமர்சனங்களை முறியடித்து பாக். டெஸ்ட் குழாமில் இணைந்த இன்ஸமாமின் மருமகன்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக முன்னாள் அணித் தலைவர்

1993 ஆம் ஆண்டு முதல் .சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொடரில் பலம் மிக்க பாகிஸ்தான் அணியை அதிர்ச்சித் தோல்வியில் வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றில் இடம் பிடித்தது அயர்லாந்து அணி.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியையும் 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளையும் வெற்றியீட்டி தமது திறமைகளை சிறப்பாகவே வெளிக்காட்டியது என்றால் மிகையாகாது. எனவே, .சி.சி 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி .சி.சி இன் முழு அங்கத்துவ நாடாக அறிவிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டி, அயர்லாந்து ஆண்கள் அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், ஏற்கனவே அயர்லாந்து மகளிர் அணி 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி கடந்த காலங்களில் மிஸ்பா உல் ஹக் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான மிஸ்பா உல் ஹsக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் ஓய்வினைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சரிவினைக்கண்டு .சி.சி இன் தற்போதைய டெஸ்ட் தர வரிசையில் 7 ஆம் இடத்தில் உள்ளது.   

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் இத்தொடரில் பல புது முக வீர்ரகளை இணைத்துக்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய அணியாக களமிறங்கும் அயர்லாந்து அணி அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணியை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்காக இரு அணிகளும் தமது வீர்ர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அயர்லாந்து அணி

வில்லியம் போர்டபீல்ட் (தலைவர்), அன்ரோ பல்பரேனி, எட் ஜோய்ஸ், டிரோன் கேன், அன்ரோ மக்பரேன், டிம் முர்டாக், கெவின் ஒப்ரைன், நீல் ஒப்ரைன் (விக்கெட் காப்பாளர்), போய்ட் ரன்கின், ஜேம்ஸ் ஷன்னோன், நதன் ஸ்மித், போல் ஸ்டேர்லின், ஸ்டுவர்ட் தொம்ப்சன், கேரி வில்சன்.

பாகிஸ்தான் அணி

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸாத் ஷபீக், அஸார் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பகர் ஸமான், ஹரிஸ் சொஹைல், ஹஸன் அலி, இமாமுல் ஹக், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ஆமிர், ரஹட் அலி, ஸாத் அலி, சமி அஸ்லம், சடாப் கான், உஸ்மான் சலாஹுத்தீன்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க