இந்தியாவுடனான டி20 தொடருக்கான அயர்லாந்து அணியில் 25 வயதுடைய வலதுகை ஓப் -ஸ்பின் பந்துவீச்சாளர் அண்டி மெக்பிரைன் மற்றும் 18 வயதுடைய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜோஷுவா லிட்ல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிட்டுள்ள ஐ.சி.சி
சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ஐ.சி.சி.)..
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரண்டு மாத இடைவெளியின் பிறகு இந்திய அணி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.
முதலில் அயர்லாந்துக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் டப்ளினில் நடைபெறவுள்ள இரண்டு டி-20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டிகளை நடாத்தவுள்ள அயர்லாந்து அணி நேற்று (21) அறிவிக்கப்பட்டது.
இதில் அந்நாட்டு உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 18 வயதுடைய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷுவா லிட்ல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஹொங்கொங் அணிக்கெதிரான டி-20 போட்டியில் இவர் அறிமுகமானார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் வட மேற்கு வொரியர்ஸ் அணிக்கெதிராக 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்த 25 வயதான சுழற்பந்துவீச்சாளர் அண்டி மெக்பிரைனும் அயர்லாந்து டி-20 குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, இந்திய தொடருக்காக அயர்லாந்து ஆண்கள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அட்ன்ரூ வைட் கருத்து வெளியிடுகையில்,
‘அனுபவமிக்க வீரர்களுடன், புதுமுக வீரர்களுக்கு அனுபவத்தைக் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த அணித் தேர்வு இடம்பெற்றுள்ளது. அயர்லாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு போட்டித் தன்மை கொண்ட அணியொன்றை கட்டியெழுப்புவதே எமது இலக்காகும்.
அதேநேரம், இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பலானா வீரர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சசெக்ஸ் சென்று எட் ஜோய்ஸ் சான்றிதழ் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களும் அணியுடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த முத்தரப்பு டி-20 தொடரில் பல வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சந்திமாலின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐ.சி.சி.யினால் நீதியாணையாளர் நியமனம்
பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில்…
எனவே, இவ்வார இறுதியில் சசெக்ஸில் நடைபெறவுள்ள இறுதிப் பயிற்சிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை இந்தியாவுடனான டி-20 தொடரில் இறுதி பதினொருவரில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதுமாத்திரமின்றி, டி-20 கிரிக்கெட்டில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வீரர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். அத்துடன், இன்னும் 12 மாதங்களில் 2020 டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னதாக பலமிக்க அணியொன்றை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
அயர்லாந்து அணி விபரம்
கெரி வில்சன் (தலைவர்), அன்ட்ரூ பல்ப்பிரைனி, பீட்டர் சேஸி, ஜோர்ஜ் டொக்ரல், ஜோஷுவா லிட்ல், அன்ட்ரூ மெக்பிரைன், கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்டபீல்ட், ஸ்டுவர்ட் பொய்ன்டர், ஜேம்ஸ் ஷெனன், சிமி சிங், போல் ஸ்டேர்லிங், ஸ்டுவர்ட் தொம்ஸன்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<