டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து

685
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் மொஹமட் ஷசாடின் விக்கெட்டை ஜோஜ் டொக்ரல் கைப்பற்றிய பின்னர்

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமானது முழு உறுப்புரிமை அளித்திருக்கும் காரணத்தினால், அவ்வணிகள் இரண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளன.

இன்று (22) லண்டனில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தொடரின் போது இந்த இரண்டு நாடுகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கும் முடிவானது (வாக்கெடுப்பு ஒன்றின் மூலம்) எடுக்கப்பட்டிருந்து.

1993ஆம் ஆண்டு, ஐ.சி.சி இன் மேலதிக அங்கத்துவ நாடுகளில் ஒன்றாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் அயர்லாந்து அணி கடந்த காலங்களில் உலகின் பிரபல்யமான அணிகளுக்கு எதிராக திருப்புமுனையான பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் லசித் மாலிங்க

அதே போன்று, 2013ஆம் ஆண்டில் ஐ.சி.சி இன் அங்கத்துவத்தினைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணியும் தற்போது கிடைத்திருக்கும் முழு உறுப்புரிமை காரணமாக, உலகின் சவால் மிக்க கிரிக்கெட் அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் மோதும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, 2000ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு முழு உறுப்புரிமை கொடுத்ததன் பின்னர், மேலும் இரண்டு அணிகளை தமது முழு உறுப்பினர்களாக உள்வாங்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் இதுவேயாகும்.

தற்போது ஒரு நாள் தரவரிசையில், 12ஆம் இடத்தில் இருக்கின்ற அயர்லாந்து அணியானது 2011ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்வியினை பரிசளித்திருந்ததோடு, தொடர்ந்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்றிருந்த உலக கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியையும் வெற்றிகொண்டிருந்தது.

இதேவேளை, இளம் வீரர்கள் பலருடன் தற்போதைய ஒரு நாள் தரவரிசையில் 10ஆம் இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியானது, T20 உலகக் கிண்ண சம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை சமநிலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.