இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான புதிய விளம்பரதாரராக ட்ரீம் 11 (Dream 11) நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய இலச்சினை இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட் – 19 வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
>>2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க<<
மறுபுறத்தில் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கிண்ணத் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தடைபட்டிருந்த ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், 2022 வரை ஐ.பி.எல் உரிமத்தை வைத்திருந்த விவோ நிறுவனம் திடீரென இந்த வருட அனுசரணையில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது.
இதனிடையே, கொவிட் – 19 வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையாலும், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையால் ஏற்பட்ட பிரச்சாரங்களினாலும் விவோ நிறுவனம் ஐ.பி.எல் அனுசரணையிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து ஐ.பி.எல் அனுசரணைப் பெறுவதற்கு அமேசன், டாட்டா மற்றும் பைஜூஸ் போன்ற பெரும் பெரும் நிறுவனங்கள் போட்டியிட்டு இருந்ததுடன், இறுதியில் ட்ரீம் 11 இந்த வருடத்திற்கான அனுசரணை உரிமைத்தை தட்டிச் சென்றது.
இதன்படி, இந்திய பணப்பெறுமதியில் 222 கோடி ரூபா பணத்தை ட்ரீம் 11 நிறுவனம் BCCI இற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகும் மஹேல ஜயவர்தன<<
இந்த நிலையில், இந்த வருடத்திற்கான புதிய இலச்சினையை ஐ.பி.எல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரீம் 11 என்ற பெயருடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இலச்சினையை ஐ.பி.எல் நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டு, புதிய இலச்சினை எப்படி உள்ளது என்று ரசிகர்களிடம் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அத்துடன், புதிய இலச்சினையுடன் #Dream11IPL என்ற ஹேஸ்டாகை (Hashtag) இணைத்துப் பதிவிட்டுள்ளது. நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பதிவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதேவேளை, ட்ரீம் 11 நிறுவனம் 2022 வரை ஐ.பி.எல் பிரதான அனுசரணையாளர் உரிமத்தைத் தக்கவைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ட்ரீம் 11 நிறுவனம் வருடமொன்றுக்கு 240 கோடி ரூபா பணத்தை கொடுக்க முன்வந்த நிலையில், குறைந்தபட்சம் 400 கோடியுடன் வரும் நிறுவனத்திற்கு மட்டும்தான் வாய்ப்பு தரப்படும் என்று BCCI திட்டவட்டமாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Now taking guard ? #Dream11IPL ??
Congratulations, @Dream11 #OneFamily @IPL pic.twitter.com/smg14wf0fE
— Mumbai Indians (@mipaltan) August 20, 2020
இது இவ்வாறிருக்க, இம்முறை ஐ.பி.எல் தொடரில் புதிதாக பைஜூ மற்றும் அன்அகடமி ஆகிய நிறுவனங்கள் இணை அனுசரணையாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
>aa>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<