இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள், இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளன. இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு குஜராத் லயன்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், சண்றைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையிலேயே, இறுதிக்கட்டப் போட்டிகள் விறுவிறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்திய மற்றும் சிம்பாப்வே தொடருக்கான இந்தியக் குழாம்
ஐ.பி.எல் விதிகளின்படி, குழு நிலையில் முதலிடம் பெற்ற இரு அணிகளும் மோதி, அப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். மறுபுறத்தில், 3ஆம் 4ஆம் இடம்பெற்ற அணிகள் மோதி, அதில் வெற்றிபெற்ற அணி, முதலிரு இடங்களைப் பெற்ற அணிகளுக்கிடையிலான போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் மோதும். இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
முதலிரு இடங்களைப் பெற்ற அணிகளான குஜராத் லயன்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி, பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குமிடையிலான போட்டி, டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை இரவு இடம்பெறவுள்ளது. அடுத்த போட்டி, 27ஆம் திகதி டெல்லியிலும், இறுதிப் போட்டி பெங்களூரில் 29ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்