2021 IPL ஏலம்: வீரர்களை தக்கவைக்கும் திகதி அறிவிப்பு

362

இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் களமிறங்கவுள்ள எட்டு அணிகளும் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

அதேபோல், வீரர்களை வாங்குவது, விற்பது போன்றவற்றுக்கான வர்த்தக நடைமுறை பெப்ரவரி 4ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல, இவ்வருடத்துக்கான .பி.எல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் பெப்ரவரி 2ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும் எனவும் பெப்ரவரி 11ஆம் திகதி வீரர்கள் ஏலம் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபி T10 லீக்கில் சங்கக்காரவுக்கு புதிய பதவி

இதில் இந்தியாஇங்கிலாந்து அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையும், 2ஆவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையும் சென்னையில் நடைபெறவுள்ளது

இவ்விரு டெஸ்டுக்கும் இடைப்பட்ட நாளில் ஏலத்தை நடத்த .பி.எல் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஏலம் நடக்கும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை

இதுஇவ்வாறிருக்க, வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பாக ஒவ்வொரு அணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட ரூ.85 கோடி, நடப்பாண்டு உயர்த்தப்படாது என்றும், பரஸ்பர அடிப்படையிலான வீரர்கள் பரிமாற்றம் பெப்ரவரி 4ஆம் திகதி நிறைவடையும் என்றும் .பி.எல் போட்டியின் தலைவர் பிரிஜேஸ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Video – PSL வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்ற Thisara Perera மற்றும் Isuru Udana..!

இதனிடையே, கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை கடந்த ஏலத்துக்குப் பிறகு சென்னை அணி வசம் ரூ.15 இலட்சம் உள்ளதால், அதிக பணத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு வீரர்களை விடுவித்து தனது நிதிநிலையை அதிகரித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது

அந்த வகையில் கேதர் ஜாதவ், பியூஸ் சாவ்லாவை சென்னை அணி விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 14-வது .பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட் சபை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அகில தனன்ஞயவிற்கு பந்துவீச அனுமதியளித்த ஐ.சி.சி.

இந்த நிலையில் .பி.எல் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021ஆம் ஆண்டுக்கான .பி.எல் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் நடக்குமா? அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படுமா? என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தியாவில் நடத்தப்பட்டால் போட்டி நடக்கும் மைதானங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<