IPL வீரர்களுக்கு வாரத்தில் இருமுறை கொரோனா பரிசோதனை

113

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் மற்றும் ஐ.பி.எல் அணிகளின் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் சபை மற்றும் ஐ.பி.எல் நிர்வாகம் என்பன கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இதன்படி, இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல, உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டால் எவருக்கும் மீண்டும் வெளியே சென்று விட்டு, உள்ளே வர முடியாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2020 .பி.எல் தொடர் கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாக இருந்தது. கொவிட் – 19 வைரஸ் பாதிப்பின் காரணமாக காவரையின்றி ஒத்திவக்கப்பட்டது. பின்னர் டி20 உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் அதே திகதிகளில் .பி.எல் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 

.பி.எல் தொடர் நடைபெறுகின்ற திகதி உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் அனைத்தும் நாளை (01) இடம்பெறவுள்ள .பி.எல் ஆட்சி மன்ற கூட்டத்தின் போது எடுக்கப்படவுள்ள நிலையில். இந்திய ஊடகங்கள் வாயிலாக .பி.எல் தொடர் பற்றிய பல செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில் இம்முறை .பி.எல் தொடர் கொவிட் – 19 வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், முதலில் மத்திய அரசின் அனுமதிக்காக இந்திய கிரிக்கெட் சபை காத்துக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடரை நடத்த தேவையான ஏற்பாடுகளை பிசிசிஐ ஆரம்பித்துள்ளது.

Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125

இதனிடையே, இந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்த இங்கிலாந்துமேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரின் போது பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இம்முறை நடைபெறவுள்ள .பி.எல் தொடரில் கடைபிடிக்க பிசிசிஐ அவதானம் செலுத்தியுள்ளது

இதுதொடர்பில் பிசிசிஐ இன் மூத்த அதிகாரி The Indian Express நாளிழதழுக்கு அளித்த பேட்டியில்,

.பி.எல் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும்பயோ பபுள்எனும் உயிர் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும். இதன்படி, .பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பேருந்து ஓட்டுனர் வரை அனைவரும் அதை விட்டு வெளியே செல்ல முடியாது.

அதேபோல. வர்ணனையாளர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். வீரர்களுக்கான உடைமாற்றும் அறையில் 15 பேருக்கு மாத்திரம் தான் அனுமதி வழங்கப்படும்

ஒருவேளை யாரேனும் ஒருவர் உயிர் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே சென்றால் அவர்களை மீண்டும் .பி.எல் தொடருக்குள் அனுமதிக்க முடியாது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

இது வீரர்களுடன் பயணிக்கும் மனைவி, காதலி அல்லது குடும்பத்தினருக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த டோனி யார் என்பதை வெளிப்படையாக கூறிய சுரேஷ் ரெய்னா

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்பட்டுச் செல்ல முன் ஒரு வாரத்தில் வீரர்களுக்கு இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிறகு முதல் வாரத்தில் இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஹோட்டலில் தங்கவும் கடும் விதிமுறைகளை பிசிசிஐ வகுத்துள்ளதாகவும், இதுதொடர்பான விரிவான விதிமுறைகளை .பி.எல் அணிகளுக்கு இன்னும் சில நாட்களில் அறிவுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுஇவ்வாறிருக்க, கொவிட் – 19 வைரஸின் தாக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறைவு என்பதால், செப்டம்பர் முதல் ரசிகர்கள் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், பி.சி.சி. தரப்பில், இந்த தருணத்தில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற எந்தவொரு முடிவையும் எடுக்க விரும்பவில்லை எனவும், .பி.எல் தொடரின் ஆரம்பத்தில் இரசிகர்களின்றி போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க