ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள (UAE) T20 லீக் தொடரில் பங்கெடுக்கும் மூன்று அணிகளின் உரிமையளார்களாக இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) அணிகள் காணப்படும் நிலையில், IPL அணிகளுக்கு UAE T20 லீக்கில் பங்கெடுக்கும் வீரர்களை தெரிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
>> இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க
ஆறு அணிகள் பங்கெடுக்கவிருக்கும் UAE T20 லீக் தொடரில், மூன்று அணிகளை மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய IPL அணிகள் கொள்வனவு செய்திருக்கின்றன.
அதன்படி மூன்று IPL அணிகளும், UAE T20 லீக்கில் தங்களுக்கு தேவையான வீரர்களை IPL தொடரில் தங்களுக்காக ஆடிய வீரர்கள் மூலம் தெரிவு செய்து கொள்ள முன்னுரிமை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆடிய சுனில் நரைனினை, UAE T20 லீக்கில் ஆடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இன் அணி கொள்வனவு செய்ய விரும்பும் சந்தர்ப்பத்தில், சுனில் நரைனினை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இன் UAE T20 லீக் அணிக்கே கொள்வனவு செய்யும் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிம் டேவிட், கீய்ரோன் பொலார்ட், ஜொப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்களையும், டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு டேவிட் வோர்னர் போன்ற வீரர்களையும் UAE T20 லீக்கிற்காக கொள்வனவு செய்வதற்குரிய முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது.
UAE T20 லீக்கில் எஞ்சியிருக்கும் மூன்று அணிகளையும் அதானி குழுமம் (Adani Group), கிளேசர் குடும்பம் (Glazer Family) மற்றும் கேப்ரி குலோபல் (Capri Global) ஆகிய நிறுவனங்கள் கொள்வனவு செய்திருக்க, இந்த UAE T20 லீக்கின் வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> பிரிட்டிஷ் அரசின் உயர் விருது மூலம் கௌரவிக்கப்பட்ட மொயின் அலி
இந்த தொடரின் வீரர்கள் ஏலத்தில் வீரர் கொள்வனவிற்காக அணிகள் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவழிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு இது IPL தொடரிற்குப் பின்னர் வீரர்கள் கொள்வனவிற்காக T20 லீக் தொடர் ஒன்றில் தொடரில் செலவழிக்க கூடிய அதிக தொகை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் UAE T20 லீக்கினை முதல் முறையாக நடாத்துவதற்கான காலப்பகுதியாக 2023ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் பெப்ரவரி வரையிலான காலப்பகுதி தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<