புதிய வரலாறு படைத்த IPL 2022 இறுதிப் போட்டி

205

குஜராத் டைடன்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இடையிலான 2022ஆம் ஆண்டின் இந்திய பிரிமீயர் லீக் (IPL) தொடரின் இறுதிப் போட்டியினை 104,859 இரசிகர்கள் பார்வையிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

IPL தொடரின் சம்பியனாக முடிசூடியது குஜராத் டைட்டண்ஸ்!

132,000 இரசிகர்கள் இருக்கை கொண்ட அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியினையே 104,859 இரசிகர்கள் பார்வையிட்டிருக்கின்றனர்.

இதன் மூலம் கிரிக்கெட் போட்டியொன்றினை அதிக இரசிகர்கள் பார்வையிட்ட நிகழ்வாக, குஜராத் டைடன்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இடையிலான 2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் இறுதிப் போட்டி வரலாறு படைத்திருக்கின்றது.

இதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியினை 87,812 இரசிகர்கள் பார்வையிட்டதே கிரிக்கெட் போட்டியொன்றினை அதிக இரசிகர்கள் பார்வையிட்ட நிகழ்வாக கருதப்படுகின்றது. அதேநேரம், கொல்காத்தா மைதானமும் சுமார் 100,000 வரையிலான இரசிகர்களை கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட அனுமதித்திருப்பதாக கூறப்படுகின்றது.

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்பட்ட போதும், கொவிட்-19 வைரஸிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நுவனிதுவின் கன்னி T20 சதத்தால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

மறுமுனையில் 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் இறுதிப் போட்டியில், ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி சம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<